விபத்தில் உயிரிழந்த யாசகரின் பையில் 135 000/=  பணம், 5 வங்கி கணக்கு புத்தகங்கள்

கடந்த வார இறுதியில் புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1இலடசத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே  (வயது 49)  உயிரிழந்துள்ளார். அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு … Read more

பேருவளையில், 8 கோடி ரூபா போதைப்பொருள் – ஒருவர் கைது

பேருவளை அம்பேபிட்டிய டயஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக ஹிக்கடுவ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.  

தனுஷ்க குணதிலக அனைத்து போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தம்

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்துவதாகவும், அவரை எந்தத் தேர்விலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேலும் சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தனுஷ்க குணதிலக்க நேற்று முன்தினம் (06) அதிகாலை 01 மணியளவில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது … Read more

ஐரோப்பாவில் கடும் வெப்பம் 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கடும் கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை … Read more

பெரும்போக நெற் செய்கை குறித்து விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை விநியோகிக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் மற்றும் இதர பயிர்களுக்குத் தேவையான பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதன் நிதியில், … Read more

ஆதரவு வழங்குமாறு சபாநாயகர் கோரிக்கை

பாராளுமன்றத்தில் நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கான சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (08) அறிவித்தார். அதேபோன்று, நியமிக்கப்படவுள்ள குழுக்கள் தொடர்பில் இன்றைய தினத்தில் இறுதித்தீர்மானத்துக்கு வந்து அனைத்துப் பணிகளையும் ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்குமாறு சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். அதற்கமைய, இன்று (08) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக்குழுக் கூட்டங்களில் இந்தத் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் தொடர்பான … Read more

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் இன்று (08) தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அதன் கணினி கட்டஅமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் … Read more

அத்தியாவசிய பொருட்களின் விலைகள்! நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை அதன்படி நிர்ணய விலைக்குட்பட்ட பொருளை வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானியை … Read more

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ,வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, 22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் கூறினார். தற்போது பாடசாலைகளில் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அமுலுக்கு வரும் புதிய ஓய்வூதியக் … Read more