சில இடங்களில் 100 மி.மீ மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 நவம்பர் 08ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில்மழை அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யும் … Read more

அடுத்த இரண்டு வருடங்களுக்கு உலக உணவு பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நாடுகளதும் விவசாய அமைச்சர்களது ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி முன்மொழிவு

அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவசியமான உணவு தேவையை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக அனைத்து நாட்டு விவசாய அமைச்சர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் COP-27 மாநாட்டிற்கு தலைமைத்துவம் வகிக்கும் எகிப்து நாட்டின் ஜனாதிபதியிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடமும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார். எகிப்து நாட்டின் ஷாம் அல் ஷேக் (Sharm El Sheikh) நகரில் தற்போது நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டின் ஒரு பகுதியாக , … Read more

இலங்கை மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதிகள் சந்திப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர் அவர்களுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் … Read more

கந்தகாடு சம்பவம்: விரைவாக அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்றிரவு (06) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார். இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த முகாமில் இருந்த 50 முதல் 60 வரையிலான கைதிகள் தப்பிச் … Read more

<span class="follow-up">NEW</span> கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!

புதிய இணைப்பு கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். … Read more

தனுஷ்க குணதிலக: கிரிக்கெட் நிறுவகம் அறிக்கை

தனுஷ்க குணதிலக தொடர்பான சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள நீதிமன்றம் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என்றும் அந்நிறுவகம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட குற்றச்செயல் குறித்து குற்றவாளியாகக் காணப்பட்டால் ,சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒத்துழைப்புடன் தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது. யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிட்னி பொலிசாரினால் இவர் … Read more

ஏழு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, நாளை (07)  மாலை 4 அணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கான எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கண்டி மாவட்டத்தின் கங்காவத்தை கோரல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேச மக்கள் மண்சரிவு தொடர்பில் மிகவும் அவதானமான இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி இன்று பிரித்தானிய பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது. எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இச்சந்திப்பு நடைபெற்றது. இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு07-11-2022

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள்

யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  மேற்படி விடயம் … Read more