சுதுமலையில் வீடு புகுந்து துணிகரத் திருட்டு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மேல் மாடியில் தூங்கிவிட்டு இன்று (06) காலை எழுந்து வந்து கீழே பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணம் வைத்த இடத்தினை பார்த்தவேளை, வைக்கப்பட்ட மேற்குறித்த அளவு பெறுமதியான பணம் களவு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

கண்டி மாவட்டத்தில் மார்பக புற்றுநோயை கண்டறிய விசேட விழிப்புணர்வு

மார்பக புற்றுநோயை கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கண்டி மாவட்ட அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒக்டோபர் மாதம்  மார்பக புற்றுநோய் மாதத்திற்கு அமைவாக இந்த திட்ட நிடகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மார்பக புற்றுநோய் எவ்வாறு உருவாகும் ,அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் நடைமுறை பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு இங்கு இடம்பெற்றது. கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மினோலி ஜோசப் தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வு திட்டத்தின் ஊடாக சமூகத்தில் மார்பக புற்று நோயை … Read more

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் திபு நகரில் டெங்கு நோய் தீவிரம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் திபு நகரில் டெங்கு நோய் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இங்கு பாடசாலைகளுக்கு விடுமறை வழங்கப்பட்டுள்ளது.   அசாமில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநில முதல்வர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சுகாதார மந்திரி கேசப் மகந்தா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டு உள்ளது. இதனால் … Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு பகுதியாக நாங்கள் மதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம் – பாதுகாப்புச் செயலாளர்

நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக முடியுமான சந்தர்ப்பங்களில் புனித விகாரைகளின் மறுசீரமைப்புத் திட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். மாத்தறை பலாடுவ பௌதோதய விகாரையில்  (நவம்பர் 04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அனுராதபுரம் சந்தஹிரு சேய, மிஹிந்தலை மிஹிந்து மஹா சேய ஆகியவைகளின் புனரமைப்பு பணிகள், கிழக்கு மாகாணத்தில் உள்ள திகவாபிய மற்றும் நீலகிரிய ஸ்தூபி புனரமைப்புத் திட்டங்கள் என்பன தற்போது … Read more

T20 உலகக்கிண்ண போட்டி : அரையிறுதியில் ,இங்கிலாந்துடன் இந்திய அணி பலபரீட்சை

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 2022 டி20 உலகக்கிண்ண கரிக்கெட் போட்டியில் ஜிம்பாவேவை வீழ்த்தி இந்திய அணி நேற்று (06) அபார வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது,.  8-வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் … Read more

கோப், கோபா உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்கள் பல கூடவுள்ளன

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல இந்த வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை 08 ஆம் திகதி அரசங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூடவுள்ளதுடன் இதில் மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்த … Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் – இராணுவம் உதவிக்கு அழைப்பு

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றமான சூழல் தொடர்கிறது. கைதிகள் தப்பியோட்டம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளது. Source link