மேல் மாகாணத்தில், உணவு வீண் விரயம் 40 வீதமாக குறைவு

மேல் மாகாணத்தில் நாளாந்தம் வீண் விரயமாகும் உணவு 40 வீதத்தினால் குறைந்திருப்பதாக கழிவு பொருள் முகாமைத்துவ அதிகார சபை  தெரிவித்துள்ளது. அதன் முகாமையாளர் நளின் மானப்பெரும இதுதொடர்பாக தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்கு முன்னரான காலப்பகுதியிலும் பார்க்க தற்பொழுது கழிவு பொருட்கள் ஏனையவை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.  பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்ட மீள் சுழற்சிக்காக பயன்படுத்த கூடிய கழிவு பொருட்களிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக்  காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில இறக்குமதி பொருட்களுக்கு வரையறை விதிக்கப்பட்டதினால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக மேல் … Read more

தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

2023ஆம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விநியோகத்தடையை தவிர்க்கும் நோக்கில் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களிடமிருந்து 150 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும் இலங்கை மின்சார சபையின் உயர் நிர்வாகம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் மற்றும் சில அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான … Read more

கோப் – 27’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி எகிப்து பயணமானார்

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (06) அதிகாலை எகிப்து நோக்கிப் புறப்பட்டார். நவம்பர் 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளையும் (07) நாளை மறுதினமும் (08) ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார். இதேவேளை … Read more

ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம்

கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் இன்று (06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,  அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கான ,தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் பாட்டாளி மக்கள் இதுவரையில் வெற்றி கொண்டவற்றை பாதுகாத்து அவற்றில் உள்ள விடயங்களில் இருந்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதன் போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்காக தொழிற்சங்கங்கள் ஆலோசனைகளை  பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்  முன்வைத்துள்ளன. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் யதார்த்தத்தை எதிர்கொள்ள … Read more

 சமையல் எரிவாயுவின் விலை

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 12.5 சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,360 ரூபாவாகும். 5 கிலோ கிராம்எடைகொண்ட புதிய சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகும். இந்த சிலிண்டர் எரிவாயு 30ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ கிராம் எடை கொண்ட புதிய சமையல்எரிவாயுவின் விலை 815 ரூபாவாகும். இதன் விலையும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரிய நட்டத்திற்கு மத்தியிலேயே இந்த விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் … Read more

யாழ்தேவி ரெயில்: கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் சேவை

யாழ்தேவி ரெயில்தடம்புரண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக, மதவாச்சி மற்றும் வவுனியாவிற்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகள்செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் ரெயில்சேவை இடம்பெறுகிறது. மதவாச்சியிலிருந்து வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரையில் ரெயில்சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.

இந்தியாவில் நடைபெற்ற முதலாவது தேர்தலில், வாக்களித்த வாக்காளர்

பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வாக்களிப்பில் முதன் முறையாகக் கலந்துகொண்டவர் என அடையாளப்படுத்தப்படும் Shyam Saran Negi காலமானார். இவர் அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார். இவரே இந்தியப்பொதுத் தேர்தலில் முதன் முறை அன்று முதலாவது வாக்காளராக  வாக்களித்தார். நேற்று காலமான இவர், ஹிமாச்சல்பிரதேசத்திற்கான தேர்தலில் இவ்வாறு வாக்களித்துள்ளார். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர்,இந்தியாவில் 1951ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தல், இவர் சார்ந்த பிரதேசதேர்தல் 5 மாதங்களுக்கு முன்பதாக நடைபெற்றுள்ளது. அக்காலப் பகுதியில் ஹிமாச்சல்பிரதேசத்தில் … Read more

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்: பதிவு கால எல்லை நீடிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டத் திட்டத்தில் இதுவரையில் 9 ஆயிரத்திற்குமேற்பட்ட முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவு நடவடிக்கை இன்றுடன்நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சந்தர்ப்பத்தை மேலும் வழங்குவதற்காக பதிவு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.