வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம் (Video)

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம் இதன்போது விபத்தில் சிக்கி பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பேருந்தில் பயணித்த 16 … Read more

சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்

சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்ற பலர் தொழில் இன்றி நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல எதிர்பார்த்திருப்பவர்ளுக்கான பதிவு பணியகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் … Read more

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி முன்னணி தமிழ் ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது. பலவீனமாக உள்ள எதிர்கட்சி எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக ஸ்திரமான ஆட்சியை நடத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகளை … Read more

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை கருத்தில் கொண்டு ,மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு இளைஞருக்கு விதிக்கப்பட்ட  மரண தண்டனையை ஏழு ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்குவது 53வது பிரிவின் விதிகள் மீறல் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் குற்றம் … Read more

சில இடங்களில், 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை,குருநாகல்,கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய … Read more

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் ,யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் திங்கட்கிழமை (31) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த உயர் ஸ்தானிகர் மற்றும் குழுவினரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர வரவேற்றார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் விசேட கவனம் … Read more

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் … Read more

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. அமெரிக்கா, … Read more

அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில்,விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (04.11.2022) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் அமைக்கப்படவுள்ள குறித்த குழு, போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம், குடும்ப வன்முறை, தற்கொலைகள் உள்ளிட்ட முக்கிய … Read more