இலங்கை
Testenium – meta கம்ப்யூட்டிங் நிறுவனத்துடன் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Testenium – meta Computing நிறுவனத்துடன் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. Testenium, meta கம்ப்யூட்டிங் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த நிகழ்நிலை பரீட்சிக்கும் தளம் (Online Testing Platform) ஒன்றினை நிறுவி, இயக்கி வருகிறது. அத்துடன் அதன் நிறுவுனரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான கலாநிதி அரசரட்ணம் தனது பல்கலைக்கழகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அடுத்த பரிமாணத்தை தற்கால மாணவர்களுக்குக் கொண்டு … Read more
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணை பூர்த்தி
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட திருத்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு உட்பட்டதா? என்பது தொடர்பான உயர் நீதி மன்றத்தின் நிலைபாடு பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணை இரண்டாவது நாளான நேற்று (03) பிரதம நீதியரசர்களான புவனகே அலுவிகார முர்து பெர்னாண்டோ மற்றும் ஜகத் டி சில்வா ஆகியோரை கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில நடைபெற்றது. விடயங்கள் தொடர்பில் நீண்ட விசாரணைக்குப் … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 04.11.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 04.11.2022
வடக்கு, கிழக்கில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 நவம்பர் 04ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் … Read more
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை
கெப்பட்டிகொல்லாவ சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர், தலையில் அடிபட்டு மூளை மற்றும் மண்டையோடு சேதமடைந்ததன் காரணத்தினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. போராட்டத்தின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிரேத பரிசோதனையை அனுராதபுர வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி மெற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 16 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் இந்த … Read more
குழந்தையை பார்க்க ஆவலாக இருந்த ஜினத்! தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் வெளியான சோக பின்னணி
என் மருமகனுக்கு என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது. எங்களில் யாருக்கும் நிலையான வருமானம் இல்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கு ஆவலாக இருந்தார் என்று தென்கொரியாவில் இடம்பெற்ற ஹலோவின் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இலங்கையரான ஜினத்தின் மாமனார் தெரிவித்துள்ளார். அரசின் உதவியை நாடும் குடும்பம் அவரது உடலையாவது நாட்டுக்குக் கொண்டு வர முடிந்தால், அது பெரிய உதவியாக இருக்கும். அதற்கு அரசு உதவும் என நம்புகிறோம் எனவும் அவர் … Read more
திருமண பதிவுக்கான தடை நீங்கும்
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு (2) பணிப்புரை விடுத்துள்ளார். இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பொது நிர்வாகம்இ உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் … Read more
முச்சக்கரவண்டி சாரதி, நியூசிலாந்து பிரஜையை ஏமாற்றி பண மோசடி
முச்சக்கர வண்டியில் கொழும்பு முழுவதையும் சுற்றிப் பார்ப்பதற்கு நியூசிலாந்து பிரஜை ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை (1,50,000) பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு (1ம் திகதி) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் செய்த முறைப்பாடொன்று (1 ஆம் திகதி) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயங்கள் வெளியாகியுள்ளன. 2020 இல் … Read more
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இறுதியாக இருந்த அமைச்சரவையை சிறிய மாற்றங்களுடன் தற்காலிகமாக நியமித்தார். தீர்மானத்தை மாற்றிக்கொள்ளாத ஜனாதிபதி நிரந்தர அமைச்சரவையை நியமிக்க திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், நிரந்தர அமைச்சரவையை நியமிக்க முடியாமல் போனது. குறிப்பாக பொதுஜன பெரமுன தரப்பில் அமைச்சு பதவிகளுக்கு … Read more