கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும் – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

கொழும்பு மா நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ,இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும்  ,அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு நோயானது உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார். இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசெம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் இதன் உச்ச மட்டத்தை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த … Read more

கட்டார் கால்பந்து ரசிகர்களை ,இலக்காகக்கொண்டு “FIFA Fan Zone” அறிமுகம்

கட்டாரில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் காலத்திற்கு இணையாக , நீர்கொழும்பு கடற்கரையில் ‘FIFA வலயம்’ ஒன்றை இலங்கை சுற்றுலா அமைச்சு ஆரம்பித்துள்ளது. இலங்கையில் 3 இரவும் 4 பகல்களும் (3 night and 4-day) stay தங்கியிருக்கக்கூடியவகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ‘FIFA வலயத்தை’ சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். ‘FIFA Zone’ க்கான பயண மீள்வுச் சீட்டு (Return ticket) பேக்கேஜ், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் … Read more

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு

உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையாளர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார். நேற்று (02) நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி தெரிவிக்கையில், ‘உக்ரைன் போர் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய படையெடுப்பிற்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் … Read more

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  பங்களாதேஷ் அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இந்தியா – பங்களாதேஷ் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டது. இதற்கமைய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்றது. விராட் கோலி 64 ஓட்டங்களுடனும், அஸ்வின் … Read more

இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பில் புடின் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கான விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய விமான சேவையான Azur விமானச்சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 300இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. Source link

மேலும் மூன்று விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இந்த மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. 2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரவிருக்கும் சுற்றுலா பருவ காலத்தில் அதிகளவான ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதன் மூலம் சுற்றுலா துறை வலுப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நீண்டகால முறைமை மாற்றங்களை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் – ஜனாதிபதியிடமிருந்து சபாநாயகருக்கு நினைவூட்டல்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இந்த முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இன்று (03) அனுப்பியுள்ள இந்த எழுத்துமூல அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. … Read more

யாழ் நகர் கிழக்கில் 'திரிய பியச' வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடு

முதியோருக்கான தேசிய செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் “திரிய பியச” வீடமைப்பு திட்டத்தின் கீழ் J/74, யாழ் நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ,நேற்று (02) பிரதேச செயலாளரினால்  பயனாளி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் அப் பிரிவிற்குரிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,வணக்கத்திற்குரிய மதகுரு , பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் , மற்றும் கிராமிய முதியோர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.