தேவைக்கேற்ப சைனோபார்ம் தடுப்பூசி மருந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளுங்கள்

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தேவையாயின், அதற்கேற்ப நடத்தப்படும் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு அதனை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எமது செய்தி பிரிவுக்கு இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்கள் தற்பொழுது செயற்படுவதில்லை. எவரேனும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தேவையாயின் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார். சுமார் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேக நபராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சட்டமா அதிபரின் ஆலேசானைக்கமைய அந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (01) உத்தரவு பிறப்பித்தார். உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக குற்ற விசாரணை திணைக்களத்தினால் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை மீண்டும் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் … Read more

குஜராத்தில் இன்று துக்க தினம்

தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய மாநிலமான குஜராத் முழுவதும் இன்று (02) துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு கடந்த 26 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனாலும் 30 அம் திகதி பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் பத்தரமுல்ல ரஜமல்வத்த என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து அஜித்குமார விக்ரமசிங்க என்ற நபர் ,நாடு முழுவதிலும் சுமார் 180 இளைஞர் யுவதிகளிடம் தலா … Read more

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது – கடற்றொழில் அமைச்சர்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை இன்று (02) சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடலட்டைப் பண்ணைகளுக்கு விண்ணப்பம் செய்த சிலர் நடைமுறைச் பிரச்சினைகள் காணமாக இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் கடற்றொழிலாளர்களின் சமாசங்களின் பெயரால் கடலட்டைப் … Read more

சமுர்த்தி உத்தியோகத்தர் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதி செயலாளர் பணிப்புரை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ,உடனடி கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (02) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினை, ஓய்வூதியம், பதவி உயர்வு நடைமுறைகள், நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக … Read more

கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்! ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் படையெடுப்பு

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொழும்பின் முக்கிய பகுதிகளில் வீதித்தடைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சில வீதிகளை முடக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  மேலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.  முதலாம் இணைப்பு … Read more