கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் … Read more

சுற்றாடல் அறிவுத் தேடளுக்கு e- நூலகம்

சுற்றாடல் அமைச்சரும் பொறியிலாளருமான நஸீர் அஹமதின் யோசனைக்கு இணங்க அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க வின் வழிகாட்டலில் e – நூலகம் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. தொழில்நுட்ப உலக மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்காக இலகு மற்றும் உடனடி சுற்றாடல் வெளியீடுகளை பரிசீலனை செய்வதை இலகு படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த e – நூலகம், தொழில்நுட்பம் முன்னேற்றமடையும் உலகில் முன்னோக்கிய பயணத்தினதும், சுற்றாடலை விரும்பும் மற்றும் சுற்றாடல் தொடர்பான அறிவைத் தேடும் … Read more

நாட்டை வளப்படுத்தும் ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே.

நாட்டை வளப்படுத்தும் ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. -மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் நினைவு நாள் வைபவத்தில் வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவிப்பு. மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அவர்களால் மட்டுமே … Read more

இலங்கையர்களுக்கு மீ்ண்டுமொரு சந்தர்ப்பம்! 5ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்க

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.   இதன்படி, சவூதி அரேபியா நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.  சவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு சவூதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான கட்டுமான திட்டங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், தகுதியான இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது. கட்டடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவீட்டாளர்களுக்கு, தொடர்புடைய திட்டங்களில் பல வேலை வாய்ப்புகள் … Read more

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் 26ஆவது நினைவு தினம்

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் 26ஆவது நினைவு தினம் இன்றாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு சேதவத்த வளவ்வையில் பிறந்தார். டபிள்யூ ஜெயவர்த்தன மற்றும் ஹெலினா ஆக்னஸ் விஜேவர்த்தன ஆகியோரின் பதினொரு பிள்ளைகளில் மூத்தவராக இவர் பிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் ஜே. ஆர். தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார் அங்கு சிறுபராயம் முதலே கல்வியிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வத்தைக் காட்டி  திறமைகளையும் வெளிப்படுத்தினார்.  பேச்சு போட்டிகளிலும் பங்குபற்றி … Read more

வரவு செலவுத்திட்டம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ,ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்தி;ட்டத்தில் எதிர்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் வரலாற்றில் சவால்மிக்க வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்த நெருக்கடிமிக்க சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் வழமை போன்று செயற்படுவது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ஒட்டுமொத்த … Read more

அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்

அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம், பாதுகாப்பு மற்றும் அக்கறைக்குரிய ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார். … Read more

வங்கக்கடலில் ,இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி ஆரம்பித்து ,மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (31) முதல் கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் … Read more

மெழுகுவர்த்தி ,ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம்

கெஸ்பேவ பிரதேச செயலக வலயத்தின் திவுல பிடிய கிழக்க மற்றும் திவுலபிடிய மேற்கு பிரதேச பெண்கள் அமைப்பிற்காக மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் திவுலபிடிய ஸ்ரீமகாபோதிராஜாராமயவில் அண்மையில் இடம்பெற்றது. பொருளாதார ரீதியில் பெண்களைப் பலப்படுத்துவதை நோக்கில் பிரயோக அறிவைப் பயன்படுத்தி சுயகைத்தொழிலில் ஈடுபடும் நோக்கிலான பெண்களுக்காக இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்திக் குழுக்களின் அங்கத்தவர்கள் 40பேர் பங்குபற்றியதுடன் கெஸ்பேவ பிரதேச செயலகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அதிகாரி டீனா சஞ்சீவனி வள உதவிகளை … Read more