மார்பக புற்றுநோய்

நாட்டில் நாளொன்றுக்கு மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 12 பெண்கள் அடையாளம் காணப்படுவதாக புற்று நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இந்த நோயினால் இருவர் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு அமைவாக தற்பொழுது மார்பக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை வசதிகள் மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை விரிப்படுத்தல் மற்றும் பரிசோதனையை மேற்கொள்வjpy; பெண்கள் முன்னரிலும் பார்க்க கூடுதலான ஆர்வம் செலுத்துவதினால் இவ்வாறு நோயாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்று அந்த … Read more

சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு

இலங்கையில் சமீப காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மதுபானங்கள் ஒதுக்குப்புற அல்லது புதர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படாமல், இவை சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பண்டைய கால கிராம மக்கள் சட்ட ரீதியற்ற மதுபானங்களை (கசிப்பு) புதர்காடுகளில் தயாரித்தார்கள். தற்காலத்தில் சட்ட ரீதியான உரிமத்துடன் கழுத்துப்பட்டி அணிந்த தொழில் முனைவோர் சட்டவிரோத மதுபானங்களை உற்பத்தி செய்வதாக, கடந்த வெள்ளிக்கிழமை (28) … Read more

யாழ் மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின், நடமாடும் சேவை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (31) யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்மானது. நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் … Read more

பிலிப்பைன்ஸில் 'நால்கே' புயல்: 98 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 5 நாட்களாக நால்கே புயலால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ள நிலையில், பல வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. பிலிப்பைன்ஸின் பல நகரங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் … Read more

T20 உலகக் கிண்ணம்: இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் ,இந்திய அணி 2022 T20 உலகக் கிண்ண தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. பிரிஸ்பேனில் நேற்று (30) நடைபெற்ற போட்டியில் ,முன்னாள் சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் பெற்றது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். … Read more

இன்று 2 மணி நேர மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று (31) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் ABCDEFGHIJKL | PQRSTUVW : – பி.ப. … Read more

பேருவளை, மருதானை பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் –  கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில்  ஆராய்வு

பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கான விஜயத்தினை நேற்றைய தினம் (30) மேற்கொண்டார்.  தென்னிலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழிலாளர் கிராமங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தின் போது பேருவளை கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    பேலியகொட மத்திய மீன் சந்தை செயற்பாடுகள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக,  நேற்றைய தினம் சந்தை வளாகத்திற்கு சென்ற கடற்றொழில் அமைச்சர்  … Read more

நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்31ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலைகாரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

மோசமான நிலைமை ஏற்படும் அபாயம் – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இந்த நிலைமை மேலும் மோசமடையும் என கூறப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கம்  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய, ஒகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக ஆக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய, கொழும்பின் நகர்ப்புறங்களில் … Read more