காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்துக்கு விஜயம் செய்யும் ரணில்!

காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை (5.11.2022) முதல் நவம்பர் (9.11.2022) ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.  காலநிலை மாற்றம் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினூக் கொழும்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள உள்ளனர். Source link

ஒவ்வொரு சூழ்நிலையிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 74 வருடகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் கடந்த 28ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர … Read more

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாகவும், வேறு சிலர் அங்கு தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இணைந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். 23 வருடங்களுக்கு முன்னர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக … Read more

வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமர்……..

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கி இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அறிக்கையின் இறுதிக்கட்டம் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவது, குறித்து கண்டி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். தயாரிக்கப்பட்ட குழு அறிக்கை பாராளுமன்றத்தில் … Read more

க.பொ .சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த மாதம்

இந்தவருடம் நடைபெற்ற 2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறை அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பெறுபேறு தயாரிக்கும் இறுதிக் கட்டப் பணி தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.. சாதாரண தரப் பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீபாவளி இந்தியா-இலங்கை ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு கொண்டாட்டம் என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த ஒற்றுமைகள் பிரதிபலிக்கும் சந்தர்ப்பங்களில் தீபாவளியும் ஒன்று என்றும் அது இன்று முழு உலகமும் கொண்டாடும் பண்டிகையாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (29) பிற்பகல் கொழும்பு எக்ஸ்பட்ஸ் கலாசார சங்கத்தின் (Colombo Expats Cultural Association) ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு … Read more

இலங்கையின் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புக்கு மேலும் ஒரு அடி

பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, அந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் பணக் கொடுப்பனவுகளை மட்டுமே மேற்கொள்ளுமாறும், சர்வதேச கொடுப்பனவுக்கு தீர்வு நுழைவாயிலின் கீழ் இலங்கை வங்கிகளுடன் கடன்களை வழங்கலை மேற்கொள்ளவேண்டாம் என்றும் உத்தரவிட்டதை அடுத்து, இந்த வாரம் இலங்கையின் ஆபத்தான குறைந்த வெளிநாட்டு கையிருப்பை சந்தித்துள்ளது. இலங்கையின் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் இலங்கையின் மத்திய வங்கி, பங்களாதேஷ் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரியதால் இந்த … Read more

ரிஷி சுனக் ஊடாக பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழர்கள் கொடுக்கவுள்ள அழுத்தம்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பார்கள் என களனிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய, பிரித்தானியாவின் புதிய பிரதமரின் ஊடாக இலங்கையின் அதிகாரப் பகிர்வில் புலம்பெயர் தமிழ் மக்கள் விசேட செல்வாக்கை செலுத்த கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு யோசனைகள் நிறைவேற்றம் பிரித்தானியா  அதிக இலங்கை தமிழ் மக்கள் வாழும் ஒரு நாடாகும்.அந்த நாட்டின் ஊடாக இலங்கை … Read more