காணாமல் போனோரை கடத்திய விடுதலைப் புலிகள்! 2020இல் கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு: மீண்டும் கிளம்பும் சர்ச்சை(video)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனார் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்திருப்பதாக சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.  இது குறித்து தமது கரிசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.  படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் காணாமல் போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டிருக்கலாம் என்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் … Read more

தென்கொரியா Halloween கொண்டாட்டம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு

தென்கொரியாவில் ஹாலோவீன் Halloween திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடிதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் நிகழ்வு இது என்பதால் மக்கள் அதிக … Read more

T20 சூப்பர் 12 தகுதி சுற்று:இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி

T20 உலகக்கிண்ண போட்டியில் சூப்பர் 12 தகுதி சுற்றில் இன்று(30) இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   8-வது டி20 உலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கான போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.   ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் … Read more

இலங்கையில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து சேவை

இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்து சேவை கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் … Read more

பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னான்டோ

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக,அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சின் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்வரும் … Read more

2022 T-20 தொடரில் ,இலங்கை அணியின் அரையிறுதிப் போட்டிக்கான தகுதி..

2022  T-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (29) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் இந்த தோல்வியின் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கையின் வேகம் (-0.89) ஆக குறைவடைந்துள்ளது. அதேவேளை ,இதற்கு அமைவாக நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகள் மற்றும் 103.85 என்ற அடிப்படையில் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன்படி 2022 T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கான … Read more

உலக பக்கவாத எதிர்ப்பு தினம் இன்று

உலக பக்கவாத எதிர்ப்பு தினம் World Stroke Day:இன்றாகும். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய்களின் ஒன்றாக இருக்கிறது பக்கவாதம். மாரடைப்புக்கு அடுத்தபடியாக உயிரை பறிக்கக்கூடிய நோயாக பக்கவாதம் இருப்பதால், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது. இரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, ரத்தவோட்டம் குறைவதால் மூளையின் பாகங்கள் செயல் இழப்பதை பொதுவாக பக்கவாதம் என்கிறார்கள். … Read more

பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இளைஞர்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு, உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் , வேலைத்திட்டங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று (29) கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வறுமையிலிருந்து மீள்வதற்கு நாட்டின் உணவுப்பாதுகாப்பை … Read more

கோதுமை மா விலை

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை 250 ரூபாவாக குறைத்திருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதிக்காக பகிரங்க கணக்குகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இறக்குமதி செய்யும் அளவை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு கோட்டை  அத்தியாவசிய பொருள் மொத்த இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.