திஹகொட  உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியலில்

மாத்தறை திஹகொட பிரதேசத்தில் சிறுவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட திஹகொட பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 55 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (29) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (28) மாலை இடம்பெற்ற இந்த சம்பவ இடத்திற்கு தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன … Read more

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 14ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது … Read more

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது வழங்கும் விழா.

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 2022 அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலைப் பேரவை, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 65ஆவது அரச … Read more

சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்துகொண்டது

உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது. ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், நேற்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியதுடன், சமூக … Read more

கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்: 60 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம்!

கடந்த நாற்பது நாட்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பருக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 97000 மெற்றிக் தொன் எடையுடைய மசகு எண்ணெய் கப்பல் இவ்வாறு கொழும்பு துறைமுக கடற்பரப்பில் காத்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை நாள் தோறும் ஒன்றரை லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த நேரிட்டுள்ள நிலையில் ஏன் அவ்வாறு இடமளிக்கப்பட்டது என்பதனை விசாரணை செய்யுமாறு பெட்ரோலிய வள நிறுவனங்கள் கோரியுள்ளன. மசகு எண்ணெய் இல்லாத … Read more

மேல்மாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்:தடுக்க கண்காணிப்பு குழுக்கள்

மேல்மாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்:தடுக்க கண்காணிப்பு குழுக்கள்… கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (28) கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். பாடசாலை மாணவர்களை இலக்கு … Read more

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு சான்றிதழ்

உற்பத்தி திறன் போட்டியில் ,திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2020/2021 ம் ஆண்டு தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட இந்த போட்டியிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது மாவட்ட செயலகம் சார்பாக மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழினை பெற்றுக்கொண்டார். பாராட்டு சான்றிதழ் நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவிடம் … Read more