பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை (25) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. பளுதூக்கல் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணம் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பாடசாலை அதிபர் அ.கு.லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர், … Read more

பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை

பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த கடந்த 19 ஆம் திகதி தெரிவித்தார்.   தற்பொழுது சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு தயாராகுவதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்படுவதாகவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். விசேடமாக தேர்தல் ஒன்றின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவு … Read more

உத்தேச “பால்நிலை சமத்துவம் , பெண்களை வலுப்படுத்தல்” சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம்

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, உத்தேச “பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்” சட்டமூலத்தை வரைபு செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடத்தியது. 2016-2020 இல் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான பல்துறை தேசிய செயற்திட்ட அமுலாக்கம் பற்றிய … Read more

ஐந்து வர்த்தமானிகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை

பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ள ஐந்து வர்த்தமானிகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்யப்பட்டதுடன், 4 வர்த்தமானிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா தலைமையில் அண்மையில் (20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் குறித்த வர்த்தமானிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, 2005 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி … Read more

  விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம்

விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத் தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாத ஆரம்பம் முதல் விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்துள்ளார்.

மோசடி பெண் திலினி தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி திகோ குழுமத்தை நடத்தி சென்ற உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியின் உரிமையாளருக்கு வாடகை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை அவர் செலுத்தவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டரில் பயணம் இதேவேளை, கதிர்காமத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் பல தடவைகள் விஜயம் செய்துள்ள திலினி ஒரு தடவைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் … Read more

எச். ஐ. வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எச். ஐ. வி. வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. மேலும், கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளனர். எச். ஐ. வி. மற்றும் பாலியல் தொடர்பான நோய்களுக்கு அதிகமான இளைஞர்கள் உள்ளாகியுள்ளதுடன், இளம் பெண்களில் கணிசமானோர் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின்; எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மசாஜ் சென்டர்கள், மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு அதிகமாக ஈர்க்கப்படுவதே … Read more

மழை நிலைமை சற்றுக்குறைவடையும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்25ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை சற்றுக்குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவாமாகாணத்திலும்அம்பாறைமற்றும்மட்டக்களப்புமாவட்டங்களிலும் பலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் … Read more