லீசிங் நிலுவையில் உள்ள வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல முடியுமா..!

மாதாந்த லீசிங் கொடுப்பனவை செலுத்த தவறியவர்களின் வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்புடன் ஊடக சந்திப்பு கொழும்பு என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு ஊடக சந்திப்பும் இவ்வாறு நடத்தப்பட்டிருக்காது. விசேட பொலிஸ் … Read more

இன்று பகுதி சூரியகிரகணம் – இலங்கையில் காணும் வாய்ப்பு

இன்று பகுதி சூரியகிரகணம் இடம்பெறுகிறது. இலங்கையில் இன்று (24)  பகுதி சூரியகிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். பிற்பகல் வேளையில் நாட்டின் சில பிரதேசங்களில் இந்த சூரிய கிரகணம் தென்படும். மாலை 5.27 மணி முதல் யாழ்ப்பாணத்தில் 22 நிமிடங்களும்இ கொழும்பில் 5.43 முதல் 9 நிமிடங்களும் சூரிய கிரகணம் தென்படும் என்று அவர் கூறினார். நாட்டின் தென் பகுதியில் சூரிய கிரகணத்தை காண … Read more

உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷ்யா கவலைப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதன்போதே மேற்கண்டவாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் மறுப்பு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷ்யா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை … Read more

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் சிறப்பு தீபாவளி நிகழ்வு

இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் இந்து மத சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க … Read more

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா இரட்டிப்பாக அதிகரிப்பு

தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) 05 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் பணிகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (24) நடந்த … Read more

நவம்பரில் இலங்கை வரும் அமெரிக்க கப்பல்!

இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்பட்ட இலங்கைக் கடற்படையின் P 627 கடல்சார் கண்காணிப்புக் கப்பல் நேற்று முன்தினம் 22 ஆம் திகதி சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்தில் நங்கூரமிட்டது. சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தனவும் கப்பலை வரவேற்பதற்காக இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,  கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ள கப்பல்  பிலிப்பைன்ஸின் மணிலா துறைமுகத்திற்கு அழைக்கப்பட்ட பிறகு, P 627 … Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு!

22வது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும் இல்லாத நிலை காணப்பட்டதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.  தேர்தல் நடத்தப்பட வேண்டும்  09மாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடக்கூடாது என்று எதிர்க்கட்சி கூட்டத்தில் உடன்பாடு … Read more

பாடசாலைகள் விளையாட்டு விழா பளுதூக்கும் போட்டி:யாழ்.இந்துக் கல்லூரி மூன்றாம் இடம்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பளுதூக்கும் போட்டிகளில் கண்டி திரித்துவ கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் .கடந்த மூன்று நாட்களாக பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 20 வயது மற்றும் 17 வயதுகளுக்கு உட்பட்ட பிரிவில் திரித்துவ கல்லூரியின் போட்டியாளர்கள் ,முதல் இரண்டு இடங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவானார்கள். வலகம்பா மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.கைதிகள் விடுதலை தொடர்பான … Read more

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயல்

நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- … Read more