மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (22) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்கே வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார். இச்சந்தர்ப்பத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற … Read more

100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக்

இங்கிலாந்தில், இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக், கொன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கியுள்ளார். இதுவரை அவருக்கு 93 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன, இருப்பினும் அவர் ஏற்கனவே 100 பேரின் ஒப்புதல்களை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், 44 ஆதரவாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பிறகு பிரதமர் போட்டிக்காக அவர் கரீபியன் விடுமுறையிலிருந்து தாயகம் திரும்புகிறார். … Read more

கொழும்பில்,14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (22) இரவு 10.00 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09, 10 ஆகிய பகுதிகளில் இன்று (22) இரவு 10.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (23) நண்பகல் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமன சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை … Read more

ஓட்டமாவடியில் அரச அலுவலர்களுக்கு சிங்கள மொழி வகுப்பு

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால்,அரச அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள, தமிழ் மொழிக் கற்கைநெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18/2020 சுற்று நிருபத்திற்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலர்களுக்கு சிங்களமொழிப் பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச அலுவலர்களுக்கு தமிழ்மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இப் பாடநெறி  கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்ளுக்கு இடம்பெற்றது.   நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், … Read more

மகிந்தவின் மலையக விஜயம்: எதிர்ப்பது எதிர்க்கட்சி மாத்திரமா..!

Courtesy: குமார் சுகுணா சில மாதங்களுக்கு முன் நாட்டு மக்களின் பாரிய எதிர்ப்புகளை சம்பாதித்த மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர், மீண்டும் மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வருவது உறுதி என தெரிவித்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது. அதுவும் மக்கள் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளனர். எதிர்பார்க்காத அரசியல் நிகழ்வு இலங்கை வரலாற்றில் யாருமே எதிர்பார்க்காத ஒரு அரசியல் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது. எப்போதும் மே மாதம் என்பது பல அரசியல் மாற்றங்களை உருவாக்கிய மாதம்தான். ஆம், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதும் … Read more

இலங்கையின் முதலீடுகளை ஊக்குவிக்க ,முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் எதிர்காலத் திட்டங்கள்

இலங்கையை முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான நாடாக மாற்றுவதற்கும், இந்நாட்டிலுள்ள தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும் இலங்கை முதலீட்டுச் சபை தயாரித்துள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில்  (20) கூடியபோதே இது தொடர்பில் … Read more

நாட்டில் குறிப்பிட்ட தொகை அரிசி இருப்பை பேணுவதற்கு முடியாமல் போனமை குறித்து..

சார்க் அமைப்பின் கொழும்பு சாசனம் மற்றும் 16வது மாநாட்டுக்கு அமைய 8,000 மெட்ரிக் டொன் விசேட அரிசிக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் 2008/8/27 ஆம் திகதியிலான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய நாட்டில் காணப்படும் உணவுத் திணைக்கள களஞ்சிய சாலைகளில் 100,000 மெட்ரிக் டொன் பாதுகாப்பான அரிசிக் கையிருப்பை பேணுவதற்கு முடியாமல் போனமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது. வேயாங்கொடை களஞ்சிய தொகுதியிலுள்ள 1, 7, 8, 9,10 மற்றும் 13 ஆம் … Read more

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!

வாகனம் கொள்வனவு செய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.  ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என  உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிதளவு குறைந்துள்ள வாகனங்களின் விலை வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மாத்திரமே சந்தையில் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் யோசிக்க முடியாது. … Read more