அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விடுமுறை நாளுக்கு (25) பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை (29) படாசாலைகள் நடாத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது

கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை நேற்று (20) இரத்து செய்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீர்க்கட்டணம் கட்டணம் செலுத்தாதததை காரணம் காட்டி, எந்தவொரு பாடசாலை நீர் விநியோகமும் துண்டிக்கப்பட மாட்டாது என்றும், நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத் திட்டமொன்றை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு பாரிய சேதம்

ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. குறித்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், வீட்டில் வசிப்பவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் ஹட்டன் … Read more

ரயில்களின் பயண நேரங்களில்

நேற்று(20) முதல் அமுலுக்கு வரும் வகையில், கடலோர அலுவலக ரயில்களின் காலை நேர பயண நேரங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான புகையிரத பாதைகளில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை காரணமாக ரயில் இயங்கும் வேகத்தை குறைக்க வேண்டியுள்ளது. தற்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் புகையிரத நிலையங்களில் நிறுத்துவதற்கான நேரத்தை அதிகரிக்க … Read more

T 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி

இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 2022 ,T 20  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.  2022 ,T 20  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ,இன்று (21) ஹோபார்ட்டில், அயர்லாந்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் இடம் பெற்ற போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, T 20  உலகக்கிண்ண தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராட சென்ற பெண் உயிரிழப்பு

கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராட சென்ற 75 வயதுடைய பெண் , முதலை  தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை நீரில் இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் பொலிஸ், இலங்கை இராணுவம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் பின்னர் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செல்ல கதிர்காமத்தினை சேர்ந்த   குறித்த பெண்ணின் சடலம், தற்போது தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான  மேலதிக … Read more

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது 2022 ஒக்டோபர்22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்21ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழை … Read more

நிர்மாணத்துறையின் சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் வீதித் திட்டங்கள் நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. … Read more

பெரும்போக நெற்செய்கைகச்கான தேவையான யூரியா உரம்

பெரும்போக நெற்செய்கைகச்கான முதலாவது முறைக்கு தேவையான யூரியா உரம், நாட்டில் உள்ள அனைத்து விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்திற்கு பல கட்டங்களின் கீழ் உரம், விநியோகிக்கப்படும். விவசாயத் திணைக்களத்தின் சிபாரிசுக்கு அமைவாக இம்முறை 70 வீத இரசாயன உரங்களும், 30 வீத இயற்கை உரங்களும் நெற்செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   நெற் செய்கையின்போது,  விதைத்து அல்லது நாற்றுகளை நாட்டி 14 நாட்களுக்குள் முதல் … Read more

சிறிய ,நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியுடனான கடன்வசதி

வியாபார நடவடிக்கைகளுக்காக கடன்வசதிகள் தேவைப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 11 முதல் 12 வீதம் வரையிலான குறைந்த வட்டியுடனான கடன் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூலதன தேவைப்பாடுகள் உள்ள, விவசாயம், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வியாபார சமூகத்தினருக்கு, இத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த கடன் திட்டத்திற்காக, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கொமர்ஷல் … Read more