உலகளாவிய ரீதியாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கேயின் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் காணப்படுகிறது. அதிக பணவீக்கம் உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக ஜிம்பாப்வே கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து கியூபா, வெனிசுலா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. இதற்கு முன்னர் இந்த பட்டியலில் முதலாம், மூன்றாம் இடங்களில் இருந்த இலங்கை தற்போது 5ஆம் இடத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது.   விரைவில் … Read more

பெரும் போகத்திற்கு விவசாய கடன்கள்

எதிர்வரும் பெரும்போகத்தில் அர்ப்பணிப்புடன்  விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு  கடன்கள் வழங்கும் நிகழ்வு நெடோல்பிட்டிய பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் நேற்று (17) ஆரம்பமானது. வழக்கமாக பெரும்போகத்தில் 8 இலட்சத்து 14 ஆயிரத்து 678 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் 2022/2023 காலப்பகுதி  பருவத்திற்கான கடன் ஆவணங்களை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று  காலை கையளித்துள்ளார். 11 பேருக்கு தலா 50 ஆயிரம் படி  விவசாய கடன்களை அமைச்சர் வழங்கியுள்ளார். விவசாய கூட்டுறவு வங்கி மூலம் முன்னோடி … Read more

பனை உற்பத்தியை வர்த்தக மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கு திட்டம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன

வடமாகாணத்தின் சம்பிரதாயக் கைத்தொழிலான பனைக் கைத்தொழிலை வர்த்தக மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக பனை அபிவிருத்திச் சபை மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் ஆகியன இணைந்து பல நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். பனை அபிவிருத்திச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வு, மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது … Read more

எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு (Video)

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்றைய தினம் (17.10.2022) அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  இந்த விடயத்தை டுவிட்டர் பதிவில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.  குறைக்கப்பட்டுள்ள விலைகள் அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று இரவு … Read more

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் யோஹானிக்கு விருது

கலாசார மேம்பாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது பிரபல பாடகி யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 13ஆம் திகதி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு கௌரவ விருதைப் பெறுவது குறித்து தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும், தன்னுடைய பாடல்கள் இவ்வாறான பெருமைகளை ஏற்படுத்தித் தருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் யோஹானி தெரிவித்துள்ளார். ‘மணிகே மகே ஹிதே’ பாடலின் ஹிந்தி பாடலும் இந்த நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் … Read more

இலங்கையில் ,இரண்டு புதிய வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இரண்டு புதிய வகை நுளம்பு இனங்களை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். மீரிகம மற்றும் களுத்துறையில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து Culex sintellus எனப்படும் நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மரபணு ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டிஸ்னகா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ் மரபணு ஆராய்ச்சியைத் தொடர்ந்து,இதற்கு முன்னர் Culex sintellus நுளம்பு இனங்கள் இந்தியா மற்றும் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது எமது நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நுளம்பு இனங்கள் பெருமூளை மலேரியா … Read more

சர்வதேச இலத்திரனியல் கழிவு தினம்

இம்முறை சர்வதேச இலத்திரனியல் கழிவு தினம் , ‘எவ்வளவு தான் சிறிதாக இருந்தாலும், அவை அனைத்தையும் மீள்சுழற்சி செய்க’ சர்வதேச மின்கழிவு என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகிறது.  சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில்  இலத்திரனியல் கழிவுகளை சேகரித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் பதிவு செய்த மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பவர்களின் ஊடாக அழிக்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியர் அனில் ஜாசிங்க உரையாற்றுகையில்: ஓவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி … Read more