சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.   அனைத்து பிரதேச … Read more

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடையும் என ஜனாதிபதி தெரிவிப்பு.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை … Read more

மழையுடனான கால நிலை தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்16ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ள வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்ற காற்று ஒன்றிணையும் பிரதேசம்) தாக்கம் காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் … Read more

எட்டாவது ஐசிசி உலக கிண்ண T20 போட்டிகள் இன்று ஆரம்பம்

எட்டாவது ஐசிசி உலக கிண்ண T20 போட்டிகள் இன்று (16 அக்டோபர்) ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள், மதிப்பீட்டின் அடிப்படையில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மீதம் இருக்கின்ற இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிப் போட்டிகளில் … Read more

2022 ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண T20 போட்டி:இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது

இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் 2022 ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில்  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கியது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன. இந்நிலையில், … Read more