மகிந்தவிற்கு சீனத்தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி

சீனாவின் கோவிட்-19 பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார். சீனத் தூதுவர் மற்றும் மகிந்த ராஜபக்சவிற்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ராஜபக்சவின் வாழ்த்து கடிதம் கலந்துரையாடலின் போது, ​​சீனாவின் … Read more

தேர்தலை இலக்காகக் கொள்ளாமல் எதிர்கால சந்ததியினருக்காகவே திருகோணமலை அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக – ஜனாதிபதி திருகோணமலையில்

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். • திருகோணமலை துறைமுகம் மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.• இலங்கையை துறைமுக … Read more

நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் இதற்கான முடிவுத் திகதி தற்போது நீடிக்கப்பட்டிருப்பதனால் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். … Read more

31 பிரதேச செயலகங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

மகாவலி மற்றும் களனி மின் உற்பத்தி பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இங்கு மில்லிமீட்டர் 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35 க்கும் 36 வீதத்திற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டது. இதன் காரணமாக இதன் வான் கதவுகள் திறக்க வேண்டியதில்லை என்று பணிப்பாளர் டி அபே சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 31 பிரதேச செயலகங்களில் … Read more

யாழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை நோக்கிப் பாய்ந்த நாய் சுட்டுக்கொலை (Video)

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. நாய் உயிரிழப்பு அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது … Read more

கரையோர ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது. இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்று முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இதில் மாற்றம் மேற்கொள்ளப்ட்டது. இதற்கமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடும் ரயில்கள் புதிய நேர அட்டவணைக்கு அமைவாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.

உலக முட்டை தினம் இன்று

1996 ஆம் ஆண்டில் வியானா தலை நகரில் நடைபெற்ற சர்வதேச முட்டைகள் மாநாட்டில் முட்டைக்காக சர்வதேச தினத்திற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் ஒக்டோபர் மாதத்தில் உலக முட்டைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உற்பத்திக்காக ஆயிரம் தொடக்கம் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இலங்கையில் வருடத்தில் ஒருவர் 174 முட்டைகளை நுகர்வுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த வருடத்தில் ஜூலை மாதம் வரையில் முட்டை உற்பத்தி 164 மில்லியன் ஆகும். இதேபோன்று கோழி இறைச்சி உற்பத்தி 18 மெற்றிக் … Read more

திலினி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

பல கோடி ரூபா மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் மேலும் பல தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சோதனைக்காக எதிர்காலத்தில் பல இடங்களுக்கு திலினி பிரியமாலி அழைத்துச் செல்லப்படுவார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒலிநாடாக்களைப் பயன்படுத்தி பிரியாமலி தொடர்பான விசாரணையை விரிவுபடுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் இரண்டு … Read more

தேசிய அடையாள அட்டை (NIC): சேவைக்கட்டணங்கள்

தேசிய அடையாள அட்டையை (NIC) பெற்றுக்கொள்வதற்கான சேவைக்கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.. இதுதொடர்பில் பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 வயதை பூர்த்தி செய்து முதல் முறையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் ,சேவைக் கட்டணமாக 200 ரூபா செலுத்தப்பட வேண்டும். மேலும் காலாவதியான தேசிய அடையாள அட்டையை மாற்றம் செய்வதற்கு 200 ரூபாவும், தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு 1000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படும். தேசிய அடையாள … Read more