நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்துகிறார் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுற

நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்துகிறார்நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (14) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்டு வந்த அநேகமான விளை நிலங்கள் போரினால் கைவிடப்பட்டு, பின்னர் … Read more

வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தல்

தங்க நகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடத்தல் நோக்கத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகிறது. இந்த கடத்தல்காரர்கள் … Read more

வடக்கில் கடலட்டை பண்ணைகளுக்கு பங்களிக்க இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம் – அமைச்சர் டக்ளசுடன் சந்திப்பு

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் இன்று நடைபெற்றது. வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் மற்றும், கலட்டை குஞ்சு பாரமரிக்கும் நிலையங்களை நவீன முறையில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருந்தனர். இந்நிலையில், நக்டா நிறுவனத்தின் … Read more

'வறுமையிலிருந்து SAMSUNG வரை கொரியாவின் அபிவிருத்தி மாதிரி பற்றிய ஒரு வினா' நூல் வெளியீடு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ மற்றும் எழுத்தாளர் சானக வத்தேகம இருவரும் இணைந்து எழுதிய ‘வறுமையிலிருந்து SAMSUNG வரை தலைப்பில் கொரியாவின் அபிவிருத்தி மாதிரி பற்றிய ஒரு வினா’ நூல் வெளியீட்டு விழா அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக (14) இடம்பெற்றது. ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட இந்நூலின் இணை எழுத்தாளரான சானக வத்தேகமவின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிநாட்டு … Read more

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

தேடப்படும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அங்கம் வகித்தவர்கள் தொடர்பிலே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.  தொலைபேசி இலக்கம்  இதன்படி, இந்த சந்திப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்படாத மற்றும் கைது செய்யத் தேடப்படும் சந்தேகநபர்கள் குழுவை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் … Read more

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள்! குற்றப் பத்திரிகை தாக்கல்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முறைகேடுகள் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணை குழு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்டுள்ளனர். இதற்கமைவாக அவர்கள் … Read more

சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் தாமதம்: உடனடியாக தீர்வுகாண அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கினார். ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் 13.10.2022 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார். 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவால்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத் துறை … Read more

பிரித்தானிய மன்னரிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகம் வாயிலாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பக்கிங்ஹாம் மாளிகை மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என பக்கிங்ஹாம் மாளிகை அண்மையில் அறிவித்திருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த வருட மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தியவரும் அப்போது … Read more

புலம்பெயர் அமைப்புகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை! இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டம்

தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாகவே அரசாங்கம் தீர்வு காணுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியிலான தலையீடுகளின்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறுமானால் இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடுகள் காணப்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், … Read more

மூன்று மாவட்டங்களில் ,குடியிருப்பு பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று(14) காலை 6.30 மணிக்கு அறிவித்துள்ளது களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு … Read more