தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் வெள்ளம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைமாற்ற வழி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் வாகன சாரதிகள் குருந்துகஹஹெடெக்ம மற்றும் தொடங்கொட … Read more

தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 100 ரூபாயாக இருந்த புதிய தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் அதிகரிப்பு மேலும், திருத்தப்பட்ட … Read more

100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்14ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல், … Read more

நாடு முழுவதும் 60,000 டெங்கு நோயாளிகள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 59,317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.   கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 19,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.   இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கண்டி, காலி, … Read more

திலினியிடம் 7500 இலட்சம் ரூபாவை கொடுத்த வைத்தியர் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

251 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியாமாலிக்கு எதிராக நேற்று (13ம் தேதி) சிறப்பு மருத்துவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். பிரபல சட்டத்தரணி ஒருவருடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த அவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு இதனிடையே, பிரியாமாலி நான்கரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக மற்றொரு கோடீஸ்வரப் பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரிடம் 7500 இலட்சம் ரூபாவை … Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேர  நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.   அதன்படி, சனிக்கிழமை(15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(16) காலை 10.00 மணி வரை இவ்வாறு  நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.   Source … Read more

மலேஷியா செல்வதற்குக் காத்திருப்பவர்களுக்கான அறிவித்தல்

சுற்றுலா விசாவில் மலேஷியாவிற்கு தொழில் வாய்ப்புக்காக செல்ல முடியாது என்றும் ,அவ்வாறான மோசடிக்காரர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு அறியத்தருமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. மலேஷியாவில் தொழிலைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சிலர், தொழில் தேடும் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்வதுடன், சுற்றுலா விசாவில் அதிகமானவர்கள் தொழிலுக்காகச் செல்வதாகப் பணியத்திற்குத் தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவ்வாறு செல்பவர்கள் மலேஷியாவினுள் நுழைந்த பின்னர், ஏதேனும் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விசாவை … Read more

1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க தீர்மானம்  

இலங்கை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசி கொண்ட கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்க அதிகாரிகளுடன் அமைச்சகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்  இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடனை செலுத்தாத காரணத்தினால் சுமார் 79 கொள்கலன் கொண்ட அரிசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது சுங்கத் திணைக்களத்தில் உள்ள 950 க்கும் அதிகமான கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க … Read more