சித்திரம் , சிற்ப காப்பு தொடர்பிலான ஓர் ஆண்டு இலவச கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

  கிராமிய கலைகள் நிலையத்தினால் சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பிலான ஓர் ஆண்டு இலவச டிப்ளோமா பாட நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாப்பதும், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை புனரமைத்தல், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல், அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல் இக்கற்கை நெறியின் இலக்காகும். இவ் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் கீழ்வருமாறு,*விண்ணப்பதாரி 18 தொடக்கம் … Read more

நம்ப மறுக்கும் உண்மை: அப்படி என்ன நடந்தது..! உண்மை சம்பவம்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் மர்மம் அடங்கிய அமானுஷ்ய சம்பவமொன்று தொகுப்பாக,   Source link

13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலயங்கள் தொடரும் என்றும் நாளை 14 ஆம் திகதி நண்பகல் வரை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட … Read more

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டி

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இன்று (13) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதேவேளை நமீபியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று (13) நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி விக்டோரியாவில் உள்ள Geelong மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை இன்று (13) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 இலட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 இலட்சத்து 65 ஆயிரத்து 963 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26 … Read more

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதி அவ்வப்போது மூடப்படும்

பொல்கஹவெல மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான யாங்கல்மோதர புகையிரத கடவை திருத்த வேலைகளுக்காக அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதி நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை அவ்வப்போது மூடப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (14) காலை 7:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும், 15ம் திகதி காலை 7:00 மணி முதல்  10:00 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல்  மாலை 4:30 மணி … Read more

அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டம் – வங்கி ஊழியர்கள் சங்கம்

இலாபத்தில் தற்போது இயங்கி வரும் அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் போது அரச வங்கிகளே உதவுகின்றன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கூறியுள்ளார். அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய திட்டம் … Read more

“ஒன்றாக எழுவோம்” என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். “ஒன்றாக எழுவோம்” என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலிமுகத்திடலில் விமர்சையாகக் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (12) பிற்பகல் … Read more

இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மண்சரிவு  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணிநேரத்துக்கு  இந்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள, வலல்லவிட்ட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொட ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரி எல்ல, பெல்மதுளை, கலவான, நிவித்திகல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு … Read more

மாணவர் பாராளுமன்றங்களில் இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையை உருவாக்க இலங்கை பாராளுமன்றம் ஆதரவு

நாடு முழுவதிலும் நடைமுறையில் உள்ள மாணவர் பாராளுமன்றங்களில் இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையை உருவாக்க இலங்கைப் பாராளுமன்றம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கான ஆரம்பமாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்று இலங்கை பாராளுமன்றத்தினால் அண்மையில் எஹலியகொட தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில்  இலத்திரனியல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்துவது தொடர்பில் நடத்தப்பட்டது. “மாணவர் பாராளுமன்றதில் இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு உதவி”  என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், இதில் மாணவ மாணவியர் மற்றும்  ஆசிரியர்களும் தமது … Read more