ஆசிரியரின் ஒழுக்கம் குறித்து விசாரணை அவசியமற்றது

நீர்கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட பாடசாலை ஆசிரியரின் ஒழுக்கம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை அவசியமில்லை என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் சுற்றறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது சிறுவர்களுடன் இணைந்து பெண் ஆசிரியை நடனமாடியது தொடர்பான … Read more

<span class="follow-up">NEW</span> ராஜபக்சவினருடன் மிகவும் நெருக்கமானவரை கடும் எச்சரிக்கையுடன் விடுவித்த நீதிமன்றம்

உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் இன்று (13.10.2022) முன்னிலையாகியுள்ளார். இதனையடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இன்று முற்பகல் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின் மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க … Read more

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தல்

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தை விட அதிகரிக்காது பயணிக்குமாறு இலத்திரனியல் பலகைகள் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இருள் சூழ்ந்துள்ளதனால், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது வாகன முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

'வறுமையிலிருந்து SAMSUNG  வரை கொரியாவின் அபிவிருத்தி மாதிரிகள் பற்றிய ஒரு வினா' நூல் நாளை வெளியீடு

‘வறுமையிலிருந்து SAMSUNG வரை கொரியாவின் அபிவிருத்தி மாதிரிகள் பற்றிய ஒரு வினா’ நூல் நாளை வெளியிடப்படவுள்ளது. இந்த நூலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக் ஷ மற்றும் எழுத்தாளர் சானுக வத்தேகம ஆகியோர் இணைந்து சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளனர். இது தெடர்பான நிகழ்வு நாளை (14) காலை 10.00 மணியளவில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி … Read more

கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு

நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உத்தரவிட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் பொது ஆணையாளர் நாயகத்திற்கு  அமைச்சர் நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் நிபுணத்துவம் இல்லாத தொழிலில் ஊழியரை வலுக்கட்டாயமாக அமர்த்தியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கும் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் தொழில் சட்டத்தின் … Read more

பாகிஸ்தானில் பஸ்சில் தீ 

பாகிஸ்தானில் பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நூரியா பாத் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு 60 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பஸ்ஸில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ்சை சாரதி உடனடியாக நிறுத்தினார். ஆனாலும் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியதில் பஸ்சுக்குள் இருந்த குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில்  உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த 40 க்கும் மேற்பட்டோரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த … Read more

பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம்

கிளிநொச்சியில் உள்ள ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு,பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன  திடீர் விஜயம் ஒன்றை நேற்றையதினம் (12) மேற்கொண்டார். இதன்போது உப்பு உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து உப்பளத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில்,தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.பி. மொரகொட உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள்

அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளை ,தாய் சிறுத்தையிடம் வனவிலங்கு அதிகாரிகள் சேர்த்துள்ளனர். ஆண் மற்றும் பெண் என இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில்  இருப்பதை அப்பகுதியில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டுள்ளனர். இதுதொடர்பாக தொழிலாளர்கள், தோட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தோட்ட அதிகாரி உடனடியாக நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்தையடுத்து .திணைக்கள அதிகாரிகள் சிறுத்தைப்புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தேவையான நடவடிக்கைகளை … Read more

ஆதிவாசிகளின் தலைவருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலா எத்தேவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விசேட பாதுகாப்பு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவுறுத்தலை பதுளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல, மஹியங்கன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கியுள்ளார். தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வன்னிலா எத்தோ அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அமைய ஆதிவாசிகளின் தலைவருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க … Read more