புதிய துணை ஆளுநர் நியமனம்

கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபையானது உதவி ஆளுநரும் நாணயச்  சபைக்கான செயலாளருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல அவர்களை 2022 ஒத்தோபர் 07ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவியுயர்த்தியுள்ளது. திருமதி டவுளுகல, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, நிதி, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், இடர்நேர்வு முகாமைத்துவம், பிரதேச அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி அத்துடன் … Read more

ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக பிரேரணை – இலங்கை எடுத்த முடிவு

ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. அதற்காக உறுப்பு நாடுகளிடையே வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்த நிலையில், இலங்கை, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. Source link

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை 2022 ஒக்டோபர்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்13ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், தென்,வடமேல்,மத்திய, சப்ரகமுவமற்றும்கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் … Read more

சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு- சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை.

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். “குழந்தைகள் மற்றும் … Read more

“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு.

“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு நேற்று (12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள் நேற்று (12) வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் … Read more

எப்லாடொக்ஸின்னினால் (Aflatoxin) சிறுவர்களுக்குப் புற்று நோய் ஏற்படுவதில்லை

எப்லாடொக்சின்னினால் (Aflatoxin)  பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை. எப்லாடொக்சின்னினால் பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக தேவையற்றுவகையில் அச்சப்படத் தேவையில்லை என பதுளை மாகாண பொது வைத்தியசாலை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியர் லக்ஷ;மன் அபேநாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான காணொளி ஒன்றின் மூலமும் அவர் தெளிவுபடுத்தினார். திரிபோஷhவில் ஆகக் கூடிய நச்சுப்பதார்த்தங்கள் அடங்கியுள்ளதா? என்பதற்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷhவில் எப்லாடொக்சின் … Read more

தென்னிலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம்

மாத்தறையில் மாற்றுத்திறனாளியான மாணவி ஒருவர் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாத்தறை, திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா என்ற மாணவி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் இரண்டு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் கல்வியில் திறமைப்பட சித்தி பெற்றுள்ளார். சாதாரண தரத்தில் சித்தி கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று … Read more

வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திக்க போகும் இரு ராசிக்காரர்கள்-நாளைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp … Read more

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த சுவிஸ் தூதரக பணியாளர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தாம் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், இன்று ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார். இலங்கை அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் கோரிக்கையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு … Read more