கட்டுப்படுத்த முடியாத ஆர்ப்பாட்டங்கள் இனி இலங்கையில் நடக்கும்! ரணில் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை

தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் கடந்த மாதங்களில் இடம்பெற்றதை விட , பாரதூரமான மக்கள் எழுச்சி ஏற்படும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைப் போன்று அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மான் தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் … Read more

கிரீன் கார்ட் விசாவிற்காக விண்ணப்பிப்போருக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அவசர அறிவிப்பு

பொதுவாக கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (US Diversity Visa Program 2024) தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்திற்காக விண்ணப்பிப்பவர்களுக்கே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு விண்ணப்பங்களை அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சிலருக்கு “Error” என்ற பதில் கிடைப்பதாக தெரியவருகிறது. இந்த விசா திட்டத்திற்காக பதிவு செய்வதற்கான … Read more

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பண மோசடி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மோசடி நடவடிக்கைகள் மூலம் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபரை ,சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு அன்பளிப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் இருந்து 11 கொடியே 6 இலட்சத்து 27 ஆயிரத்து 175 ரூபாவை … Read more

வாகனம் செப்பனிடும் இடங்களை பதிவு செய்ய நடவடிக்கை

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்  திருடப்படுவதை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் 2,863 வாகனம் பழுதுபார்க்கும் கெரேஜ்கள் மற்றும் அதுபோன்ற இடங்களைப் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்மாகாணத்தின் 126 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய 2863 வாகனம் செப்பனிடும்  கெரேஜ்கள் மற்றும் அதுபோன்ற இடங்களின் 2000 க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான ரி 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை உலகக் கிண்ணப் போட்டிக்கான மற்றொரு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி நாளை (13) அயர்லாந்து அணியை எதிர் கொள்ளவுள்ளது. மெல்போர்னில் நேற்று (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 … Read more

Green Card க்கு விண்ணப்பிக்கும் போது பொறுமையாக செயல்படுமாறு ஆலோசனை

2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முக விசாவிற்கு தற்போது, சர்வதேச ரீதியில் பலர் விண்ணப்பிக்கின்றனர். ஒரே தடவையில் இவ்வாறு விண்ணப்பிப்பதினால் dvprogram.state.gov எனும் தளத்தை அணுகும் போது சேவை தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் இன்று அறிவித்தது. சர்வதேச ரீதியில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை காரணமாக இந்த இடைக்கால சேவை தடங்கல் ஏற்பட்டுள்ளது எனவும் தயவுசெய்து பொறுமையாக செயல்படுமாறும் , தொடர்ந்து முயற்சி செய்யுமாறும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் கூறியுள்ளது. கிறீன் கார்ட்டுக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 05 தொடக்கம் … Read more

போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வருவது குறித்து பல முறைப்பாடுகள்

அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் குழந்தையொன்று பாதிப்புக்கு உள்ளானமை குறித்தும், சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளில் சிறுவர்களை பங்கேற்க வைப்பதன் மூலம் அவர்கள் பாதிக்கப்படலாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமது அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் … Read more

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேகரித்த ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேகரித்த பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 – 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 104 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தமை இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கணக்கிலிருந்து 81 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.