மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா – அடுத்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா 2023 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் … Read more

மகளிர் ஆசிய கிண்ணம் : இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

 மகளிர் ஆசிய கிண்ணம் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று (11) அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மொத்தமாக பெற்றது. இலங்கை … Read more

திருத்தப்பட்ட வரிச் சட்டமூலம்! வெளியானது வர்த்தமானி

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. Source link

சாரதி அனுமதிப்பத்திர கட்டணத்தில் மாற்றம்

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திற்கு பதிலாக புதியதொன்றை மாற்றுதல் ஆகியவற்றிற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனஇதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். http://documents.gov.lk/files/egz/2022/10/2301-17_T.pdf

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 08 பேர் பேசாலை பகுதியில் கைது

சட்ட விரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது குழுவொன்று பேசாலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பேசாலை 08ஆம் பிரிவு பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இந்தியாவிற்கு சடம்டவிரோதமாக தப்பிச் செல்வதற்கு தயாரான நிலையில் வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 08 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் … Read more

காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறைக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பானும் இலங்கையும் கைச்சாத்திட்டன

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று முன்தினம் (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர். அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்த ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் … Read more

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம்! ஜனாதிபதி.

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது! சஜித் பிரேமதாச விமர்சனம்

தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சி அதனை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. தேர்தல்களை ஒத்திவைக்க  முயற்சி எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்தல், தவிசாளர்களின் அதிகாரங்களை குறைத்தல் என்பவற்றுக்கான சட்டமூலங்களை முன்வைக்கப்போவதாக அரசாங்கம் தற்போது கூறத் தொடங்கியுள்ளது. அந்த விடயங்கள் நல்லதுதான் ஆனால் அதனை சாட்டாக வைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை … Read more

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் – அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார். நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் பலவீனங்களை கண்டறிந்து மீண்டும் பலப்படுத்துவதன் மூலம் இலங்கை பொருளாதார ரீதியாக முன்வர முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற சப்ரகமுவ … Read more

எனது பிள்ளை எனக்கு வேண்டாம்! யாழில் 15 வயது மகனை பொலிஸில் ஒப்படைத்த தாயின் நெகிழ்ச்சியான பதிவு

“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார். உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என்றும் பொலிஸாரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்படைத்துள்ளார். நீதவானின் பணிப்புரை இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் பணித்துள்ளார். யாழ். குடாநாட்டில் உயிர்கொல்லி … Read more