கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சிரமதானம்

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘அழகான நாடு – எழுச்சியுறும் தேசம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக ,மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களில் காணப்படும் சிறிய நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்கான சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இதற்கான நடவடிக்கை இடம்பெற்றன. கைவிடப்பட்ட வயற்காணிகளை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தல், உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் சமய நிகழ்வுகள் என்பனவும் இடம் … Read more

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவுதொகை அதிகரிப்பு

காணாமல் போனோரின் குடும்பங்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா உதவு தொகை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரசின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் (11)  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:காணாமல் … Read more

சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (11)  திறக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு, சூரிய சக்தி மின்நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்நிலையத்தின் மின் உற்பத்தி, பொது மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரிய … Read more

இலங்கையில் திலினி பிரியமாலியின் செல்போன் தொடர்பிலும் வெளியாகியுள்ள தகவல்

நிதி மோசடி சம்பந்தமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் கைதியிடம் செல்போனை  50 ஆயிரம் ரூபாவை தருவதாக கூறி, சிறையில் இருக்கும் பெண்ணொருவரிடம் அவர் இந்த கையடக்க தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த பெண் கைதிக்கு இந்த கையடக்க தொலைபேசி  எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட இந்த கையடக்க தொலைபேசி … Read more

மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம்(10) மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை, நீர்ப்பாசனத்திட்டங்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டங்கள் மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகங்களின் மாநாட்டு மண்டபங்களில் குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது பெரும்போக விவசாய செய்கைக்கான திகதி எதிர்வரும் 20 … Read more

யாழ் மாவட்ட செயலகத்தில் ,பிறப்பு பதிவு செய்யப்படாத பிள்ளைகளின் பிறப்பு பதிவுகள்

இதுவரை பிறப்பு பதிவு செய்யப்படாத பிள்ளைகளின் பிறப்பு பதிவுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நேற்று (10 மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவினை மேற்கொண்டார். இந்த விஷேட நிகழ்வில் 25 பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் – அரசாங்கம்

இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்கம் இந்த மாற்றுக்கொள்கையை குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரமே முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் அனுமதி இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்த பின்னர், இந்த அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. இலங்கையை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக … Read more

யாழ்ப்பாண அரச வாடிவீடு அபிவிருத்தி – அமைச்சரவை தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை, அபிவிருத்தி செய்யும் நகர மயமாக்கல் அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று(10)  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு 03. வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்று நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்கல்   நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் … Read more