ரஷ்ய ஏரோப்ளொட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்     

இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய ஏரோ-ஃப்ளொட் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். 65 வருடகாலமாக நிலவிவரும் ரஷ்ய – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏரோ-ஃப்ளொட் தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது மிகவும் முக்கியமான விடயம் என்று விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் இருந்து பிரிவதற்கு அத்திவாரமிட்ட கருணா! நடந்தவற்றை கூறும் பிள்ளையான்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் பலர் இருந்தனர். அவர்களிடம் இருந்தும்  அமைப்பில் இருந்தும் கிழக்கு மாகாணம் பிரிவதற்கு முதலில் அத்திவாரமிட்டவர் கருணா தான் என்று தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து முதலில் கருணா வெளியேறினார்.  அமைப்பில் இருந்து கிழக்கு மாகாணம் வெளியேறுகின்றது என்று இயக்கம் அறிவிக்கும் போது  நான் குருநாகலில் … Read more

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகிக்கும் சதித்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். மேலும், ஐஸ் வகைப் போதைப்பொருள் தற்போது நாடு முழுவதும் பேரழிவு வடிவில் பரவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. ‘இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தில், கம்பளையில் முகநூலில் தொடர்பு … Read more

அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு

அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம  பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் இதனை ர் குறிப்பிட்டார். விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் கூறினார்.  Source link

முதல் 9 மாதங்களுக்குள் 700,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

  இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 7 இலட்சத்து 733 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 919 ஆண்களுக்கும்இ 2 இலட்சத்து 90 ஆயிரத்து 814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்இ அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 286 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் பண்டார குறிப்பிட்டுள்ளார். திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படிஇ … Read more

இலங்கையில் வாகன கொள்வனவிற்காக காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்த நிலையில் பொருளாதார பாதிப்பிலிருந்து மீளும் முகமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வாகன இறக்குமதிக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இலங்கையில் வாகனங்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்திருந்தன. … Read more

ருவிட்டரை வாங்கும் எலோன் மஸ்க்: எதிர்காலத்தில் அவரது ‘X’ செயலி தொடர்பில் வெளியான தகவல்

ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் எலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம் வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ருவிட்டர் நிறுவனத்திடம் எலோன் மஸ்கின் வழக்கறிஞர் அளித்த கடிதம் மூலம் இந்த விவகாரம் முடிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அந்த கடிதத்தில் ருவிட்டர் நிறுவனத்தை வாங்க எலோன் மஸ்க் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. X செயலி இந்த நிலையில், ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவது, X என்ற “எவரிதிங் ஆப்” செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என கடந்த … Read more

காலிமுகத்திடல் போராட்டம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தொடர்பில் வெளியான தகவல் (Video)

காலிமுகத்திடலில் நேற்றைய தினம் பதிவாகிய பதற்ற நிலைமையின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தையின் உடல் நிலை அதன்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு வைத்தியர்கள் குழந்தைக்கு … Read more

கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு அமைச்சின் புதிய அறிவிப்பு

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5,500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், 4074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீட்டுத் திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனக் குடியரசின் மானியமாகப் பெறப்படும் 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அந்தத் திட்டத்தின் கீழ் … Read more