7499 இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

73வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பல்வேறு நிலைகளில் இருந்து ஏறக்குறைய 7499 இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பதவி உயர்வுகள் இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு விழா … Read more

2022 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இலக்கு

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது. நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக … Read more

ஹரக்கட்டாவை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என் று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கொழும்பில் உள்ள தேசிய … Read more

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ சமகால அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்தோம். ஜனாதிபதி கோட்டாபயவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், … Read more

இலங்கை – பங்களாதேஷ் மகளிர்கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர்கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(10) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி புள்ளி பட்டியலில்  அமைவாக 3வது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை அரச சேவைகள் வழமை போன்று இடம்பெறும் – வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

நாளை தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி நாளை தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் இதேவேளை, நாளைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்றைய … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள இரு ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன் (Video)

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் … Read more

அடுத்த தேர்தலுக்குள் மேற்கொள்ளவுள்ள முக்கிய நடவடிக்கை – ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூராட்சி சபைகள்/நகர சபைகள் மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இல் இருந்து 4000 ஆக குறைக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஒரு தலைவருக்கு வழங்காமல், அவை தலைவர் அடங்கிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு … Read more

மகளின் கணவனை கொடூரமாக கொலை செய்த தந்தை

தந்தையொருவர் தனது மகளின் கணவனைக் கொன்ற செய்தி ஒன்று ஹபரணை சேனாதிரியாகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பின்னர், கணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மகளும் தனது தந்தையை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். நேற்றிரவு அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் அவர் அம்பாறை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவரை காப்பாற்ற தந்தையை தாக்கிய மகள் இராணுவ சிப்பாய் … Read more