அரச நிறுவனங்களின் பணிகள் நாளை வழமைபோன்று இடம்பெறும்

நாளை திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கமைவாக அரச நிறுவனங்களின் பணிகள் நாளை வழமைபோன்று இடம்பெறும்.  இருப்பினும் வங்கிகளுக்கு நாளைமேலதிக விடுமுறை தினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பாடசாலைகள் வழமை போன்று நாளைஇடம்பெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு ஆதரவை வழங்கிய முஸ்லீம் நாடுகள் உட்பட பாரம்பரிய நண்பர்கள், இலங்கையின் கோவிட் தகனம் விவகாரம் காரணமாக தமது ஆதரவை வழங்கவில்லை. மனித உரிமைகள் பேரவை இந்த தோல்வியை அடுத்து போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம், மனித உரிமைகள் பேரவை, அதிக நிதியை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர். … Read more

பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பில் நியமிக்கப்படும் தெரிவுக் குழு தீர்மானம் .எடுக்காவிட்டால், சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படும்.

    பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். • தேர்தல் முறையில் பல திருத்தங்கள் • உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை • தேர்தல்களுக்கு செலவிடப்படும் … Read more

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம்

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மாதத்திற்கு 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மத ஸ்தலங்கள் பொது நோக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்படும். 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணம் அலகொன்றுக்கு ரூ.32/- ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைவாக , 180 அலக்குளுக்கு மேலாக மின்சாரத்தை … Read more

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹாரே பதவிப் பிரமாணம்.

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி புவனெக்க பண்டுகாபய அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பதவிப் பிரமாணம் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு, 12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் உரம்

12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்குக் கிடைக்கவிருப்பதாக இராஜாங்க அமைச்சர்மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு உலகவங்கியின் நிதியுதவி கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா மேலும் கூறினார்.

<span class="follow-up">NEW</span> காலி முகத்திடலில் அமைதியின்மை! ஏராளமானோர் கைது : பெருமளவிலான படையினர் குவிப்பு (Video)

புதிய இணைப்பு காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து  பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.   இதன் காரணமாக அங்கு கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.  அத்துடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடத்திலும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.  முதலாம் இணைப்பு கொழும்பு – காலி முகத்திடலில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு … Read more

சிறுவர்களுக்கு எதிராகமேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறை: தகவல்களைத்திரட்டுவதற்கு விரிவான வேலைத்திட்டம்

சிறுவர்களுக்கு எதிராகமேற்கொள்ளப்படும் வன்முறைஇ பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்களைத்திரட்டுவதற்கான வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபை தெரிவித்துள்ளது. சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில்,  சர்வதேச இணக்கப்பாட்டிற்கு அமைவாக நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார். இது தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்  குறிப்பிட்டார்.