சஹ்ரான் குழு முக்கியஸ்தர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு, ஷங்க்ரிலா ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் குழுவின் முக்கியஸ்தர்கள் மூவருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா, முஹம்மது அமீர் முஹம்மது ஆயத்துல்லா, முஹம்மது மஸ்னூக் ரிலா ஆகியோருக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாசிம் குழுவின் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குத் தாக்கல் இந்நிலையில் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற … Read more

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்பத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும். உலகிற்கு ஓர் அருட்கொடையாக முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் அனுப்பப்பட்டார். 40 வயதில் நபித்துவத்தைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள் 10 வருடகாலம் மக்காவில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார்கள். மக்களுக்கு வாழ்க்கையின் உண்மைத் தன்மையை புரிய வைத்து மனிதனைப் பூரண மனிதனாக்கும் பணியில் ஈடுபட்ட நபியவர்கள் பல சொல்லொணா இன்னல்களையும் சந்தித்துள்ளார். அவர்களின்; போதனைகள் உலக வாழ் மக்கள் அனைவரையும் சார்ந்ததாக … Read more

வடக்கு,கிழக்கு வடமத்திய மாகாணங்களில் 100 மி.மீ மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்09ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பலஇடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 … Read more

கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: பலத்த காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் பலஇடங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் சிலஇடங்களில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ … Read more

நாளை விசேட வங்கி விடுமுறை

நாளை (10)விசேட வங்கி விடுமுறை தினம் என்பதனால்  அனைத்து வர்த்தக வங்கிகளும் மூடப்பட்டிருக்குமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதினால் ,( 09 ஞாயிற்றுக்கிழமை ) வங்கி விடுமுறை தினத்திற்கு பதிலாக,  நாளைய தினம் விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை. கொழும்பு பங்குச் சந்தையும் நாளை மூடப்பட்டிருக்கும்.

நபிகள் நாயகத்தின் உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும்

“உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய அவரது உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மீலாத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பினவருமாறு:  இலங்கை மற்றும் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினம் … Read more

தமிழ் நாட்டு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு தமிழ் நாட்டு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநாதம் விஜயம் செய்துள்ளார். துணைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநாதம் நிறுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமகால சூழலில் பட்டதாரி மாணவர்களின் மனப்பாங்கினை புரிதல்’ என்னும் தலைப்பிலான செயலமர்வில் உரையாற்றினார் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக உத்தியோகத்தர் மேம்பாட்டு நிலையத்தின் இணைப்பாளராகிய கலாநிதி ஜயந்தினி விக்னராஜனின் அழைப்பின் பேரில் பேராசிரியர் என்.பஞ்சநாதம் விஜயம் செய்தார்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் பரிசு பொருள் அதிர்ஷ்டம்: இணைய தள மோசடி

தீபாவளி பண்டிகை நேரத்தில் பரிசு பொருள் அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாக இணைய தள மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர் இதுதொடர்பில் இந்திய சைபர் கிரைம் பொலிவார் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த மோசடியில் பணத்தை இழந்த சிலர் சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை nதிர்வரும் 24 ஆம்திகதி வருவதையொட்டி மர்ம ஆசாமிகள் Online னில் பரிசு பொருள் அதிர்ஷ்டம் … Read more