தேசிய பேரவை உபகுழுவின் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கும் உறுப்பினர்கள் இணங்கினர். இதேவேளை தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க  (07) தெரிவுசெய்யப்பட்டார். நேற்று முன்தினம்  (7 ஆம் திகதி)  நடைபெற்ற உபகுழுவின் முதலாவது கூட்டத்திலேயே இந்தத் தெரிவு … Read more

பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையில் இணக்கம்

பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வெளிநாடு செல்லும் 2022.10.08 அன்று முதல் 2022.10.13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்குப் பாராளுமன்றப் பேரவையில்  (06) இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவியொன்றில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.ஜே.கே.எஸ்.டபிள்யு. விக்ரமசிங்கவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையினால் ஜனாதிபதிக்கு … Read more

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம்: விவாதம் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில்

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

தேசிய பேரவை உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவு

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும்  நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவு  (07) தெரிவுசெய்யப்பட்டார். உபகுழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ நாமல் ராஜபக்ஷவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாகர காரியவசம் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் இதனை வழிமொழிந்தார். இதில் கொள்கைத் தயாரிப்புத் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அரச நிர்வாகக் … Read more

கடந்த வருடம் 12 அரச பல்கலைக்கழகங்களுக்கு 89 பில்லியன் ரூபா செலவு

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், கடந்த வருடம் 12 அரச பல்கலைக்கழகங்களுக்கு 89 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார். தேசிய வானொலியின் நிகழ்ச்சியில் நேற்று (08) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவன் இவ்வாறு குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களில் ஆரம்ப கல்வியாண்டில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர்களை சமூகப்படுத்தும் முதன்மை கலாச்சாரமாக உள்ளது. ஆனால் தற்காலத்தில் பகிடிவதை, உடல், உள, பாலியல், சமூக, அரசியல், இனமத … Read more

வாழைச்சேனை ஆயிஷாவில் விஞ்ஞான ஆய்வுகூட கண்காட்சி

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கண்காட்சி (6) நடைபெற்றது. மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கண்காட்சியில், பகுதித்தலைவர்களான எஸ்.பாறூக் கான், கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.எல்.எம்.முஸம்மில் உட்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர்.  

இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி

சவாலான நேரங்களிலும், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது வழங்கியுள்ளார். இந்தியாவில் இராணுவ பயிற்சிகளை பெற்ற இலங்கை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, பாதுகாப்பு படைகளின் அதிகாரி சவேந்திர சில்வா உட்பட்ட பல உயர் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி இந்தியாவின் எப்போதும், ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கைக்கு … Read more

'Tab & Go' முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

சுற்றுலா மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் இணைந்து புதிய ‘Tab & Go’ முற்கொடுப்பனவு அட்டையினை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளால் நாடளாவிய ரீதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியும்.   அமெரிக்க டொலர்களை செலுத்தி குறித்த அட்டையினை பெற்றுக் கொள்ள முடியும். எரிசக்தி அமைச்சு, Dialog Axiata, Millennium IT ESP, Central Bank of Sri Lanka, Banking Partner … Read more

காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்து இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை

  காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து வகைகள், இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகளை முகவர் நிலையங்கள் மிக கவனமான முறையில் இறக்குமதி செய்வதாகவும் மேலும் விளைவுகளை ஏற்படுத்தும் எவ்வித மருந்துகளைம் இறக்குமதி செய்யவில்லை எனவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த ரிட் மனு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவினவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுத்துள்ள அறிவிப்பை நிராகரிக்கும்படி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க … Read more