சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரல்

குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான தகுதி இருந்தும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிககம் (06) பாராளுமன்றத்தில்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிககம்: … Read more

சில இடங்களில்75 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்08ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா, கிழக்கு, வடக்குமற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில் … Read more

இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் எதிர்வரும் அக்டோபர் 9ஆம் கொண்டாடப்படுகிறது. சிறப்பு விடுமுறை எனினும் குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. இது ஒரு பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினம். இதனையடுத்தே வேலை நாளான அக்டோபர் 10ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக … Read more

கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலைஊடாகமட்டக்களப்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் சிலஇடங்களில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தறையிலிருந்துஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையானகரையோரத்திற்கு … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தற்போதைய பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக அமைச்சர் நேற்று (07) பாராளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில் சுதந்திரத்திற்கு முன் இவ்வாறான நிலை எக்காரணத்திற்காகவும் ஏற்பட்டதில்லை. இதற்கு முதல் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவடைந்துள்ளது. 2002 இல் 1.4வீதமும் 2021இல் கொரோனா … Read more

கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை

கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை “ரஜரட்ட ஒடிஸி” இன்று (8) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இந்த சொகுசு ரயில் காலை 9.20 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரயில் கம்பஹா, வெயாங்கொடை மற்றும் பொல்கஹவெல நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். பிற்பகல் 1.00 மணியளவில் அனுராதபுரத்தை சென்றடையும். நாளை ஞாயிற்றுக்கிழமை (9) மாலை 5.00 மணிக்கு அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் இந்த சொகுசு ரயில்   இரவு … Read more

பிலியந்தலையில் 6 கிலோ ஹெரோயின் போதை பொருள் கண்டுபிடிப்பு

பிலியந்தலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 6 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிலியந்தலை, சித்தமுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 19 9mm பிஸ்டல் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கைக்குழந்தையுடன் மணல் திட்டில் இரண்டு நாட்களாக தவித்த குடும்பம்! முப்பது மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்பு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கைக்குழந்தையுடன் அகதிகளாகத் தமிழகத்துக்குச் சென்ற 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று முப்பது மணிநேரத்தின் பின்பு இந்தியக் கரையோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து படகு வழியாகச் சென்ற 5 பேரும் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 5ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் நேற்று காலை மறாயன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். மீனவர்கள் வழங்கிய தகவல் இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது

17 வயது பாடசாலை மாணவியின் அந்தரங்க விடயங்கள் அடங்கிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் மூவரும் 20, 23 மற்றும் 24 வயதுடைய நபர்கள் என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவி தனது காதலனுக்கு அனுப்பிய காணொளியை (Vedio) காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் குறித்த நண்பர்கள் சமூக ஊடகங்களில் … Read more