இலங்கை
இம்மாத இறுதியில் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம் – மத்திய வங்கியின் ஆளுனர்
தற்போதைய பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (06)இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தற்போது, வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் டொலர்கள் உள்ளிட்ட அந்நிய செலாவணி வரவுகளில் முன்னேற்றம் உண்டு இதனால் , அந்நிய செலாவணி பணப்புழக்கம் நேர்மறையான நிலையை எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாத இறுதியில் தற்போதைய … Read more
இலங்கையில் (06.10.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் (06.10.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
31 லட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 07.10.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 07.10.2022
அமைச்சு பதவி கேட்டு ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய மொட்டு கட்சி உறுப்பினர்கள்
ஆளும் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலில் மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு … Read more
22 வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு
அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் இவ் விவாதம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (6) பிற்பகல் சபையில் அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 22 வது திருத்தம் தொடர்பில் இன்றும் (6) நாளையும் (7) விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
“தேசிய பேரவை” நியமித்த தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுக்கள் நாளை கூடும்
பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (ஒக். 06) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. “தேசிய பேரவையின்” முதலாவத கூட்டத்தில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட இரு உபகுழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் … Read more
அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு
சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் சி.மொரீன் தலைமையில் இன்று (6) திகதி கலாசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர்களின் உன்னத சேவையினை போற்றும் முகமாக சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 06 திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் எம் .செல்வராஜா கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.சக்கரவர்த்தி,மற்றும் … Read more
இலங்கையில்,கொவிட் தொற்று மரண அறிக்கை (06.10.2022)
இலங்கையில்,கொவிட் தொற்று மரண அறிக்கை (06.10.2022)