கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் நேற்று (22) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதந்திர தினத்தை … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர். கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.   ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.   • நெருக்கடியில் … Read more

உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக முறையான ஏற்பாடு

  • பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, … Read more

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பக்க அம்சமாக அமைச்சர் அலி சப்ரி சர்வதேச பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்விற்கு இலங்கைத் தூதுக்குழுவை வழிநடத்திச் சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதுக்குழுக்களின் தலைவர்கள் பலரை நியூயோர்க்கில் வைத்து சந்தித்து, பல்வேறு உயர்மட்ட அமர்வுகளிலும் உரையாற்றினார்.   அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்தார்.   பங்களாதேச பிரதமர் ஷேக் … Read more

அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் நீண்ட கால நிவாரணம் – ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் நீண்ட கால நிவாரணமாக சூரிய சக்தி மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கும் வழங்க கூடிய நிவாரணம் தொடர்பில் கண்டறிவதற்காகவும் ஜனாதிபதியின் ஆலோசனை பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதுதொடர்பிலான இறுதி … Read more

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே கோபால் பாக்லே இந்த விடயத்தை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் நட்புறவினை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதன்போது நன்றி தெரிவித்தார்.

பெற்றோருக்கு விசேட அறிவித்தல்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் ஆஸ்த்துமா (மூச்சுத்தடை நோய் (Asthma)) நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் அறுபது சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைக்கான காரணம் குழந்தைகள் அறியாமலேயே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் … Read more

காத்தான்குடியில் உணவகங்களில் திடீர் சோதனை – 3 உணவகங்களுக்கு சீல்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகளின் உணவு தயாரிக்கும் இடங்களில் நேற்று (22) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகளின் உணவு தயாரிக்கும் இடங்களில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு இவைகளை சீர் செய்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது,  பேக்கரி உள்ளிட்ட மூன்று உணவகங்களுக்கு இதன்போது சீல் வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை … Read more

'இலங்கையரின் புன்னகையை பாதுகாத்தல்'

‘இலங்கையரின் புன்னகையை பாதுகாத்தல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையில் சுற்றுலாதுறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று சுற்றுலாத்துறை அதிகார சபை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் பருவகாலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை வருமானமாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக விடயத்தான அமைச்சர் ஹரிண் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் விசேடமாக   Swiss air, Asus air, Aeroflot from Russia, and Air France  ஆகியவை தமது … Read more

பெற்றோலிய பொருட்கள் திருத்த மசோதாவுக்கு விசேட பெரும்பான்மை தேவை -உயர் நீதிமன்றம்

பெற்றோலிய பொருட்கள் தொடர்பான சிறப்பு விதிகள் (திருத்த) பிரேரணை அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுக்கு முரண்பாடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று(22)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில் இந்த திருத்த பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியம் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு இல்லாத பட்சத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்ற முடியும். பெற்றோலிய பொருட்கள் தொடர்பான இந்த விசேட பிரேரணையை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கடந்த 31 ஆம் … Read more