சென்னையில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமான சேவை

சென்னையில் இருந்து கட்டார் தலைநகர் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா அறிமுகப்படுத்தவுள்ளது. சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் 30ஆம் திகதி  முதல் இந்த விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். கட்டாரில் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நேரில் பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.13 இலட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,513,856 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 612,913,306 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 590,894,849 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,945 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பில் ATM அட்டை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் உள்ள ATMகளில் நபர் ஒருவர் பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை மோசடியான முறையில் திருடுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதற்கமைய, அந்தந்த வங்கிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (11) காலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (11) காலை வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபால்பூர் அருகே 20 கி.மீ. தூரத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் … Read more

புதிய விசா, முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்ள வசதியாக அமையும்

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள் , முதலீடுகளை மேலும் மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார். துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் Rakibe Demet  வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தார். , நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். … Read more

மின் கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ள பல நிறுவனங்கள்

வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர். இதில் 9.56 பில்லியன் ரூபா கட்டணங்கள், சாதாரண வீட்டுப்பாவனையாளர்களின் கட்டணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் கோரிக்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பது இன்றியமையாதது. எனவே மின்சார நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை விரைவில் … Read more

இரண்டாவது எலிஸபெத் மகாராணியின் பூதவுடல் ஸ்காட்லாந்து எடின்பர்க்கில்

மறைந்த இரண்டாவது எலிஸபெத் மகாராணியின் பூதவுடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த கடந்த 8 ஆம் திகதி காலமானார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு இங்கிலாந்து மக்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவை தொடர்ந்து, இளவரசராக இருந்த 3-ம் சார்ல்ஸ் மன்னராக அரியணை ஏறியுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்ர் … Read more

ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2022 ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் ஏனைய வீரர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பினால், சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அணிக்கு இந்த சிறந்த வெற்றியைப் பெற முடிந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தி  சர்வதேச விளையாட்டு ரசிகர்கள் உள்ளிட்ட விளையாட்டை விரும்பும் அனைவரது கவனத்தையும் இலங்கையின் பக்கம் ஈர்த்த இந்த வெற்றி, … Read more

2022 ஆசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்தை இலங்கை கைப்பற்றியது

2022 ஆசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை 63-53 புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது. ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும். இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு டுபாயில் நடைபெறவுள்ளது.