மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்மு, உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து, இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார். இரங்கலை குறிப்பேட்டில் பதிவு செய்த ஜனாதிபதி இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவு குறிப்பேட்டிலும் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதிய ஜனாதிபதி, இரண்டாவது எலிசபெத் மகாராணி 7 தசாப்தங்களாக உலக மக்களுக்காக ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டியுள்ளார். … Read more