பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட  துறைமுக நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள உதவி: சமந்தா பவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உதவி இந்த உதவி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (10) வருகை தந்த சமந்தா … Read more

தடை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1. இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை … Read more

பயங்கரவாதத்தடை சட்டத்தை இரத்து செய்ய அனைவரும் ஒன்று சேர வேண்டும் – ரவூப் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதாக மாயையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார். 40 வருடங்களுக்கு மேலாக நீதி … Read more

இலங்கைக்கு தொடரும் நெருக்கடி – ஐநா விடம் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலுப்படுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் மன்னிப்பு சபை கோரியுள்ளது. இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், … Read more

லஹிரு வீரசேகரவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த மேலதிக நீதவானால் இவ் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான லஹிரு வீரசேகர, கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் வைத்து நேற்று (09) கைது செய்யப்பட்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்  மருதானையில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடிய அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் … Read more

நிதி ஒதுக்கீட்டுச் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (09) சான்றுரைப் படுத்தினார்.

பிரதேச சபைகளைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் , சிவில் சமூகத் தலைவிகளுக்கு பாராளுமன்றத்தில் விசேட நிகழ்ச்சி

பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த  நிகழ்ச்சிக்கு பவ்ரல் அமைப்பும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதற்கமைய சட்டமியற்றல் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் … Read more