அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை

அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள், அவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையில் தெரிவித்துள்ளார். சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தில் இணைவதாகவே தீர்மானித்திருந்தோம் சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மாத்திரம் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்து இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்மானத்திற்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 5,554 பேருக்கு கொரோனா

இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 5,554 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,90,283 ஆக குறைந்தது .* புதிதாக 18 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

கண்ணிவெடி அகற்றல் பயிற்சி பெற்ற முதல் இராணுவ பெண்கள் குழுவுக்கு இராணுவ தளபதியினால் சான்றிதழ்

கண்ணிவெடி அகற்றல் பயிற்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இராணுவ தகவல்களுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, சர்வதேச தரத்திலான மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியை முடித்த 3 பெண் அதிகாரிகள் மற்றும் 51 ஏனைய தர இராணுவ பெண் கண்ணிவெடி அகற்றும் குழுவினருக்கு இந்நிகழ்வின் போது சான்றிதழ்களை வழங்கினார். இக்குழுவினருக்கான … Read more

அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள தடை:ஜனாதிபதியின் உடனடியான உத்தரவு

அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதாகவும் அவற்றை உடனடியாக திருத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் உடனடி உத்தரவு இந்திய முதலீடுகளை ஒத்துழைப்புகளை நாட்டில் நடைமுறைப்படுத்துவது மற்றும் சில அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதித் தூதுவர் வினோத் ஜேகப் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்திய முதலீட்டிற்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள  தடைகள் இந்திய முதலீட்டின் … Read more

இணைய வழி மூலம் இரத்தின கல் விற்பனை

3 ஆயிரம் டொலர்கள் பெறுமதி வரையான இரத்தின கல் மற்றும் தங்க ஆபரணங்களை இணைய வழி மூலம் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்காக சமர்பிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 300 அமெரிக்க டொலர்களாக இத்தொகை வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்புக்கு வருகை தராமல் பிரதான தபால் நிலையங்கள் ஊடாக சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்த பின்னர் தேசிய இரத்தின கல் மற்றும் தங்காபரண இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு முடியும்.

வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய இலங்கையர்களுக்கு வாய்ப்பு

வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் … Read more

தமிழ் மக்களுடைய விவகாரம் வேணடுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது!: யோதிலிங்கம்

தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை வெளிவந்துள்ளது. இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,  ”மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித் தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான … Read more

உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடரும் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்: செல்வராசா கஜேந்திரன் (Video)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 13 பேரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  அரசியல் கைதிகள்  13 பேரும் தங்களது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் “இராணுவ புலனாய்வு பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் … Read more

வீடு ஒன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

பதுளை – ஹிங்குருகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 மற்றும் 83 வயதான இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதுடன் தாயும் மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.  முகத்தை மூடிய நிலையில் வந்த சிலர்  லயன் குடியிருப்பு வீடொன்றில் வசித்து இரு பெண்களே முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரால் படுகொலை … Read more

கடன் வழங்கும் நாடுகளிடம் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை-செய்திகளின் தொகுப்பு

சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா வலியுறுத்தியுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் சுமார் 25% பேராபத்தில் இருப்பதாகவும், இலங்கை நீண்ட காலமாகவே இப்படிப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% க்கும் அதிகமான நாடுகள் … Read more