இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்

முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு அத்திடியவிலுள்ள ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இங்கு … Read more

வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும் சுங்கத் தீர்வை பெறுமதியை 6650 டொலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  வெளியான விண்ணப்பம் இதேவேளை வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் சட்ட ரீதியான வழிமுறைகளில் வங்கிகளின் ஊடாக பணத்தை அனுப்பி வைத்தால், வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய … Read more

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் – தமிழக சினிமாவினால் முடியாத காரியம்

Courtesy: ஜெரா காத்தவராயன் கூத்தினை நடிகர்கள் ஆடிக்கொண்டிருக்கையில், மெய்மறந்தாவது ஒரு வசனத்தை – ஆட்டமுறையில் பிழைவிட்டால் போதும், உடனடியாகவே பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கண்டனக் குரல்கள் எழும். “பிழையா ஆடுறான்… பிழையா பாடுறான்” எனப் பார்ப்பவர்கள் உடனடியாகவே சுட்டிக்காட்டிவிடுவர். அந்தளவிற்குக் ஈழத்துக் கூத்துப் பார்வையாளர்கள், கூத்து தொடர்பான அறிவில் மேம்பட்டவர்கள். நன்கு பரிச்சயமானவர்கள். அறிவோடு ஆழப் பழக்கப்பட்டவர்கள்.  அதேபோலவேதான், ஈழத்தமிழர்க்கு ஈழ ஆயுதப் போராட்டமும். அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய “இயக்கத்தின்” வரலாற்றிலும், “தலைவர்” என நினைவில் கல்வெட்டாகி … Read more

டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள் டொலர்களில் பணம் செலுத்தி அந்தந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். … Read more

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் குறித்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்குள் களனி ஆற்றின் தாழ்வான பகுதிகள், கொழும்பு, கொலன்னாவ, கடுவெல, சீதாவக்க, அவிசாவளை, ஹன்வெல்ல, பியகம, தொம்பே, வத்தளை, தெஹியோவிற்ற, ருவன்வெல்ல, மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச … Read more

சீரற்ற காலநிலை – மாணவன் உயிரிழப்பு

நேற்று (5) பெய்த கன மழையினால் ,பாதுகாப்பற்ற வாய்க்காலில் விழுந்த, குருநாகல் வெஹெர பகுதியை சேர்ந்த பதினான்கு வயது மாணவன் உயிரிழந்துள்ளார். பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நான்கு மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் வாய்க்காலில் சிக்கிய இளைஞன் மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் வீடு செல்வதற்காக பாடசாலை வேனில் எற முற்படும்போது கால்வாயில் தவறி விழுந்துள்ளார். குருநாகல் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று … Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரயோக பரீட்சைகள் ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரயோக பரீட்சைகள் இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் பிரயோக பரீட்சைகளை மேலும் 5 நாட்கள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை செப்டம்பர் மாதம் … Read more

சீன அரசினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் புலமைப்பரிசில் வழங்கும் விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கம் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் திருமதி.குய் ஜென்ஹாங் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர். சீன மக்கள் குடியரசின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் … Read more