புலமைப்பரிசில் மற்றும் A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கான திகதி பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறும் எனவும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகி , 2023 ஜனவரி 02 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை  ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா இன்று

ஐக்கிய தேசிய கட்சி இன்று அதன் 76ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது சம்மேளன கூட்டம் “ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இன்று (06) மாலை இடம்பெறும். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கு தலைமை தாங்குவார்;. கட்சி உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பாராளுமன்றம் சாராத அனைத்து கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இந்த நிறைவாண்டு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தசாப்தத்தில் டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் காணப்பட்டது போன்ற … Read more

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு நியமனம்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு நியமனம்  

மாவட்ட விளையாட்டு விழாவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சம்பியன்

47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 66 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சம்பியனாக தெரிவாகியுள்ளது. வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்படும் குழுநிலை மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதேவேளை 13 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை தென் … Read more

மின்னணு அட்டைகள் மூலம் சேவைகளுக்கு பணம் செலுத்தும் வசதி

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் இன்று (05) முதல் எந்தவொரு இலத்திரனியல் அட்டையினூடாகவும் செலுத்த முடியும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) திருமதி டி. குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொழிநுட்பத்தின் முன்னேற்றத்துடன் இன்றைய இளம் தலைமுறையினர் எப்போதும் பணத்தை விட இலத்திரனியல் அட்டைகளினூடாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர். … Read more

தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர், மலிக் ரணசிங்க கடமைகளை பொறுப்பேற்பு

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் புதிய தலைவர் சிரேஷ்ட பேராசிரியர், மலிக் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் (UoM) சிவில் பொறியியலில் சிரேஷ்ட பேராசிரியரும், பட்டய பொறியாளரும் சர்வதேச தொழில்முறை பொறியாளரும் இலங்கையின் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரும்,இலங்கை திட்ட முகாமையாளர் நிறுவனத்தின் உறுப்பினரும் இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினரும் ஆவார். பேராசிரியர் ரணசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆகவும் ,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினர் ஆகவும் பல்கலைக்கழக … Read more

சீனாவுடனான உறவு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர

உரக்கப்பல் தொடர்பான பிரச்சினையே சீனாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டின் பேரில் முறையான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும்  தெரிவிக்கையில்…  ‘சீன உரக் கப்பல் தொடர்பான பெரும் பிரச்சினை ஒன்றிற்கு நாம் முகம் கொடுக்கின்றோம். ஒருபுறம், சர்வதேச அளவில் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் நாங்கள் … Read more