ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ,தெஹிவளையில் இளைஞர் கைது!
ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் மாத்திரைகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 6.115 கிராம் ஹெரோயின் மற்றும் 147 மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெஹிவளை களுபோவில பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் நுகேகொட நீதவான் முன்னிலையில் இன்று (5) ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.