இலங்கை
ஜனாதிபதி தலதா பெரஹரவை பார்வையிட்டார்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹர இன்று (11) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பெரஹரவை பார்வையிட்டார். இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-08-11
மாகாண நிர்வாகம் , அபிவிருத்தியின் ஒழுங்கான செயல்முறையைப் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்பு ஆளுநர்களுக்கு
மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள், இது குறித்து அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இன்றைய சவாலான காலகட்டத்தில், பொதுச் செலவினங்களை முகாமைத்துவம் செய்து, பொது மக்களுக்கான சேவைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது. மாகாண சபை … Read more
நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம் ,ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் அடங்கியுள்ளது
தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் … Read more
மின் கட்டண அதிகரிப்பு: பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர் அறிவிப்பு
அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (10) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றினார் இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,மின் கட்டண அதிகரிப்பு குறித்து பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , “மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் … Read more
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய தினமும், எதிர்வரும் 14ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மணிநேர மின்துண்டிப்பு இதேவேளை நாளையும், நாளை மறு தினமும் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு (11.08.2022)
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு (11.08.2022)
இத்தாலியில் ,குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி
இத்தாலியில் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி பணி பணி ஆரம்பமாகியுள்ளது. உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகின்றமையினால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. இதனால் சில நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தியுள்ளன. இதற்கமைய குரங்கு அம்மைக்கு எதிராக இத்தாலியில் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் (8) ஆரம்பமாகியுள்ளது. இந்த தடுப்பூசி பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 2 டோஸ் கொண்ட ஜின்னியோஸ் … Read more
தங்கப் பதக்கங்களை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன்
தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரருமான யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வருமாவார்.