கொவிட் நோயாளிகள் வார்டுகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன

கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் உள்ள கொவிட் வார்டுகள் (Ward) நிரம்பி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. IDH மருத்துவமனையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கொவிட் வார்ட் (Ward) தற்போது நிரம்பியுள்ளது. அதனால் கொவிட் நோயாளர்களுக்காக மற்றொரு வார்டை ஒதுக்க மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் வட கொழும்பு போதனா வைத்தியசாலை போன்ற பிரதான வைத்தியசாலைகளில் தற்போது அதிகளவான கொவிட் தொற்றுக்குள்ளான … Read more

மீண்டும் தலைதூக்கும் டெங்கு…

தற்போது டெங்கு அதிக அபாயகரமான தொற்றுநோய் நிலையை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதன்காரணமாக இன்று (25) விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதத்தில் இதுவரையிலும், 8900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 43000 ஆகும். மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஐம்பது வீதமான (50%) டெங்கு நோயாளர்கள் … Read more

இலங்கையில் கடுமையான நெருக்கடி நிலை! விசேட விவாதம் (Video)

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலை தொடர்பில் விசேட விவாதம் ஒன்று சென்னை சிடிசென்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.  இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.  இதன்போது,  இலங்கையில் ஏற்பட்டுள்ள நெக்கடி நிழலை மற்றும் வெளியேறும்  வழி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.  இதில் பேச்சாளர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,  ஊடகவியலாளர் AP.மதன் மற்றும்  ஊடகவியலாளர் பகவான் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  Source link

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அனைத்து பாடசாலைகளும் மீளத்திறப்பு

இன்று முதல் திங்கள் செவ்வாய் வியாழக்கிழமைகளில் பாடசாலையை திறப்பதற்கு கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இணங்க அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (Online) நிகழ்நிலை மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் சுற்று நிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு நான்கு தினங்களுக்கு ஒரு தடவை 40 லிட்டர் எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்குவதற்கு … Read more

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – வழமை போன்று நடத்துவதற்கும் நடவடிக்கை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதுகுறித்த ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை  பாடசாலைகளை வழமை போன்று நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இருந்து பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு உயர்ந்த பட்ச … Read more

வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – பாதுகாப்புக்கு இராணுவத்தினருக்கு அழைப்பு

மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மோதல்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெறுவதனை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இருந்த போதிலும் கொழும்பு நகரில் அதிகளவான இராணுவத்தினர் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இராணுவ பாதுகாப்பை … Read more

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் தலைநகர் தில்லியிலும் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரையில் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்நோயால் பாதித்துள்ளனர். … Read more

அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்

அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.. அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை … Read more

வஜிர அபேவர்தனவின் பெயர் பரிந்துரை

கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு உரிய வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் கீழ் மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினரொருவராகத் … Read more