'குரங்கு அம்மை' Monkeypox பரவலை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ Monkeypox பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை  Monkeypox தொற்று நோய் இருந்து வருகிறது. உலகம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை, கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது. நைஜீரியாவில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கு வந்த ஒருவர் மூலமாக அந்நாட்டில் குரங்கம்மை பரவ தொடங்கியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை … Read more

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் , அதை ஒட்டிய வட கடலோரப் பகுதிகளில், சூறாவளி

நாளை (25) மற்றும் நாளை (26) மறுதினம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 – 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது இதேவேளை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’ என்றும்  சென்னை வானிலை ஆய்வு … Read more

அரச,அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி … Read more

எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை

நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் … Read more

அவசரகால நிலை கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போது அவசரகால நிலை சட்டத்தின் கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,, பொலிஸார் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என தெரிவித்தார். நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக ஒன்றுகூடல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், இவ்வாறான … Read more

பொது நிதியைக் கொண்டு பராமரிக்கப்படும் வளங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொது பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார். “தரத்தில் உயரத்தை அடையம் போது நீங்கள் … Read more

கடலோர பாதுகாப்பு படைக்கு மற்றுமொரு கப்பல் இணைத்துக் கொள்ளப்பட்டது

இலங்கை கடலோர பாதுகாப்புப்படைக்கென ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் (OPV)  ஜயசாகர என்ற பெயரில் இன்று (ஜூலை 23) உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. துறைமுக நகரான திருகோணமலையில் இன்று காலை நடைபெற்ற அதிகாரமளிக்கும் இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிகாரியாக கலந்து சிறப்பித்தார்.  இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின்  பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க அங்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை வரவேற்றார். அதிகாரமளிக்கும் … Read more

போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை! காணொளிகள் மூலம் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர்

அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களை சேதப்படுத்தி அங்கிருந்த பெறுமதியான பொருட்களை களவாடியதாக கூறப்படும் 100இற்கும் மேற்பட்டோரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் கைது செய்யப்படுவர்.. புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடன் அந்த நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் முடிவடைந்தவுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அவர்களைக் … Read more

இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 18ஆந் திகதி அட்டெரிட்ஜ்வில்லில் உள்ள லெரடோங் ஹொஸ்பிஸில் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் தலைமையில் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது. உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன பல இராஜதந்திரிகளுடன் இணைந்து 18 நோய்வாய்ப்பட்ட நோயாளர் விடுதியின் ஊழியர்களுக்கு தன்னார்வ சேவைகளை வழங்குவதில் நேரத்தை செலவிட்டார். மேலும், இலங்கையின் சார்பாக சிலோன் தேயிலை மற்றும் நோயாளிகளுக்கான கழிப்பறைப் பொருட்களையும் வழங்கினார். ஐ.நா. பொதுச் சபையால் (ஐ.நா. … Read more