இலங்கை
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 23.07.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 23.07.2022
இன்றைய (22) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(22..07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினம்
எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை டெங்கு ஒழிப்பு விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அனர்த்தம் அதிகமாக இருப்பதனால் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தபால் கட்டணம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்….
2022 ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தப்படும் என்று தபால் திணைக்களக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச விமான அஞ்சல் மற்றும் சர்வதேச கடல் அஞ்சல் கட்டணங்கள் ஆகிய இரண்டும் அதிகரிக்கப்படும். இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வெளிநாட்டு தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 4 வருடங்களுக்குப் பின்னரே இம்முறை இக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக … Read more
கொழும்பின் சில பகுதிகளில் நாளை ஏழு மணிநேர நீர் விநியோகம் இடைநிறுத்தம்
நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாளை ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நாளை (23) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகன இலக்கத் தகடுகளை மாற்றுபவர்களுக்கு ….
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றறுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும். பின்னர் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் இந்த தண்டனையை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மோட்டார் வாகனச் … Read more
வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை (22) நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை … Read more
அவமானமாக உள்ளது! சீருடைகளை அணிவதற்கு படையினர் தகுதியானவர்கள் இல்லை: போராட்டக்கள பெண் ஆதங்கம்(Video)
உங்களை நினைக்க அவமானமாக உள்ளது. உங்கள் சீருடைகளை அகற்றுங்கள் அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை என காலிமுகத்திடல் போராட்டக்கள பெண் ஒருவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் போராட்டக்காரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன்போது போராட்டக்கள பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,”வெட்கமாக இருக்கிறது உங்களை நினைப்பதற்கு. நாங்கள் இங்கு புத்தகத்தை தான் பாதுகாக்கிறோம் குண்டு வீசவில்லை. நீங்கள் இங்கு நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கின்றீர்கள். … Read more
இடைக்கால அரசாங்கத்தின் 18 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவையும் இன்று சத்தியப்பிரமாணம்
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (22) பிற்பகல் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்கள்1. பிரதமர் தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம்இ உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள்இ உள்ளூராட்சி சபைகள்2. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்3. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்4. பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்5. … Read more