காலிமுகத்திடல் பகுதியின் தற்போதைய நிலவரம் (Video)

கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் – நேரடி ரிப்போர்ட் இன்று அதிகாலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பல வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி … Read more

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்று எழுத்து மூலம் அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.  

யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள்

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் … Read more

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

இலங்கையின் பிரதமராக ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்ப்பு

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது தொடர்பான சத்தியப்பிரமாண நிகழ்வு தற்போது   கொழும்பு-7இ ப்ளவோர்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறுகிறது. 

பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 யூலை 21ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வரும் வகையில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் கௌரவ ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் … Read more

இந்திய ஜனாதிபதி தேர்தலில் முதல் பழங்குடியின பெண். திரவுபதி முர்மு  வெற்றி

இந்திய ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு Droupadi Murmu  வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் அந்நாட்டின் வரலாற்றில் முதல் பழங்குடியின பெண்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது வகிக்கின்றார். ராம்நாத் கோவிந்த்.14 ஆவது  … Read more