முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.     Source link

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் – முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார்

இலங்கையில் இன்றைய தினம் முக்கிய அரசியல் நிகழ்வுகள் பல பதிவாகியுள்ளன. இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இது தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்கள் தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன. அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1. இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் … Read more

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR குறியீட்டைப் பெறுவதற்கு http://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை (ICTA) பொதுமக்களுக்கு இன்று இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது அறிவிப்பை வெளியிடும் போது, தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத தளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ICTA தெரிவித்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR குறியீட்டை வழங்கும் அதிகாரத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே … Read more

இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் ஆராயப்பட வேண்டும்

இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் ஆராயப்பட வேண்டும். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் தற்போதைய மாற்றத்திற்கான அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு எதிர் அணிகளின் கடந்தகால ஆட்சி முறை நாட்டை நிலைகுலைய வைத்துவிட்டது எனவும் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நம் நாட்டு இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அதற்கிணங்க நாட்டை கட்டி எழுப்ப அனைத்து கட்சிகளும் முன்வர … Read more

புதிய ஜனாதிபதிக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வாழ்த்து தெரிவிப்பு

  இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கைக்கான தமது நாட்டின் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்பை மீண்டும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.. அத்துடன் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் Julie Chung தெரிவித்துள்ளார். அவர் இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் … Read more

இம்மாத முடிவுக்குள் எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு

இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு எரிவாயு சிலிண்டர் தாங்கிய சுமார் 6 தொடக்கம் 7 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை

கிளிநொச்சி மாவட்ட மக்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டையை கிராம அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஊடாக கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளனஅதனை கிராம அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்றையதினம் (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் ஊடாக எரிபொருள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள … Read more

யாழில் வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்க அடிப்படையில் பெற்றோல் விநியோகம்

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் இன்று முதல் (21) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளிற்கு 1500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்/வான் மற்றும் இதர வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம்பெறும். செவ்வாய் , சனி – 0,1, 2 இலக்கத்திற்கும்,வியாழன், … Read more

எமது வேட்பாளர் தோல்வியுற்றார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தமது கட்சியால் முன்நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வியுற்றார் என்று முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது ,ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாங்கள் டலஸை எமது கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தினோம். நாம் அவருக்கு வாக்களித்தோம். அவர் தோல்வியுற்றார். யாராவது வெற்றி பெற … Read more

புதிய ஜனாதிபதிக்கு டலஸ் வாழ்த்து

பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னின்ற திரு.டலஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எண்ணிக்கையில் தோல்வியடைந்த நான் தனது அரசியல் சித்தாந்தத்தில் தோற்கவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், தியவன்னாவ தீவில் உள்ள 225 குடும்பங்களுக்குப் பதிலாக, தீவுக்கு வெளியே உள்ள 58 இலட்சம் குடும்பங்களுக்காகவும் முன் நின்றமையே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். … Read more