9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைச் சம்பவங்கள்

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர். மேலும், இன்று (20.07.2022) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று, இரண்டு சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரையிலும் 3225 பேர் சந்தேகத்தின் பேரில் … Read more

சட்டவிரோதமாக எரிபொருள்:சந்தேகத்தின் பேரில் 997 பேர் கைது

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11.04.2022) காலை 06.00 மணி முதல் இன்று (20.07.2022) காலை 06.00 மணி வரை சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்தல், களஞ்சியப்படுத்த மற்றும் விற்பனை செய்தik தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸார் 1077 முற்றுகைகளை மேற்கொண்டனர். இதன் போது 997 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முற்றுகைகளின் மூலம் 33,847 லீற்றர் பெற்றோல், 109,634 லீற்றர் டீசல் மற்றும் 19,214 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் … Read more

இன்று முதல் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பைசர் தடுப்பூசி நிலையங்கள்

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் 19 தடுப்பூசி மருந்தை கொழும்பு மாநகர சபை தடுப்பூசி நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்று நோய் நிபுணர் டாக்டர் டினு குருகே இன்று தெரிவித்துள்ளார். தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் , கடைசி கொவிட் தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பொது மக்கள் தங்களின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது Pfizer கொவிட் … Read more

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க  தெரிவு  

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குப் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளால் இன்று (20) தெரிவுசெய்யப்பட்டார். இதில் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டளஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுரகுமார திஸசாநாயக ஆகியோரின் பெயர் அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு … Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஐந்து மாதங்களில் தீர்வு – மத்திய வங்கி ஆளுநர்

எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் ஐந்து மாதங்களில் தீர்வு காண முடியும். அதுவரை கடினமாக காலமாக அமையும். எவ்வாறாயினும், … Read more

விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு எரிபொருளுக்கான விண்ணப்பம்

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கான எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குவதற்கு விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட செயலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்ப படிவத்தின் பிரதி மற்றும் திகதி முத்திரை அல்லாத விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் விண்ணப்ப … Read more

8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி தெரிவு: அதி விசேட வர்த்தமானி இன்று வெளியீடு

இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஇ ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதற்கான அதி விசேட வர்த்தமானி பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இன்று (20) வௌியிடப்பட்டுள்ளது. 1981ஆம் 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ்இ இன்றைய தினம் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இத்தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலராக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க செய்யப்பட்டிருந்தார் .

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட  திரு. ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை

இலங்கையில் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட, திரு ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தினார். தான் 45 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்ததாகவும், தனது வாழ்க்கை பாராளுமன்றத்திலேயே இருப்பதாகவும் திரு ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டார். எனவே, பாரளுமன்றம் தனக்கு வழங்கிய இந்த மரியாதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தனக்காக வாக்களித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…. “நாட்டின் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி – கடற்றொழில் அமைச்சர்

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். “இலங்கை அரசியல் நெருக்கடிகளையும்,பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், ரணில் விக்ரமசிங்க தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்று கூறியிருந்தோம். தற்போது நாட்டு … Read more